“அக்மார்க்” வேட்பாளராக நம்ம வாத்தியார் கல்யாண சுந்தரம் (நாம் தமிழர் கட்சி)

கல்யாண சுந்தரம் (நாம் தமிழர் கட்சி) இவர் ஒரு சொத்து மதிப்பு அட்டவணை தயாரித்துள்ளார். அந்த அட்டவணையில் எதிர்க்கட்சி வேட்பாளர்களின் விவரங்களுடன் தன் சுய விவரங்களையும் அச்சிட்டு, இதனை பொதுமக்களிடம் வினியோகித்து வாக்கு சேகரித்து வருகிறார். அதில், வேட்பாளர்களின் பெயர், வயது, சொத்து மதிப்பு உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. வாத்தியார் தொழில் அதாவது இருக்கும் 3 வேட்பாளர்களிலேயே வயது குறைந்தவர் கல்யாணசுந்தரம். நடராஜன் வயது 68, சிபி ராதாகிருஷ்ணன் வயது 61, கல்யாண சுந்தரம் வயதோ 36! மற்ற இருவரின் தொழில் முழு நேர அரசியல் என்றால் கல்யாண சுந்தரமோ வாத்தியார் தொழில் பார்க்கிறார். நடராஜன் மீது 4 கேஸ்களும், சிபி ராதா மீது 1 கடன் நிலுவை கேஸ் உள்ளதாக சொல்லி, அந்த வழக்கின் விவரங்களை தெரிவித்துள்ளார். ஆனால் கல்யாணசுந்தரத்தின் மீது ஒரு வழக்கும் இல்லை. நடராஜன் குடும்பத்தின் சொத்து மதிப்பு, சிபி ராதாவுக்கு 69 கோடியே 75 லட்சத்து 638 ரூபாய் உள்ளது. நடராஜனுக்கு 2 கோடியே 47 லட்சத்து 24 ஆயிரத்து 430 ரூபாய் உள்ளது. ஆனால் கல்யாண சுந்தரத்துக்கு 8 லட்சத்து 55ஆயிரத்து 082 ரூபாய் இருக்கிறது. சிபி ராதாகிருஷ்ணன் இதுபோக கடன் பாக்கி பற்றின விவரமும் இந்த அட்டவணையில் உள்ளது. 32 லட்சத்து 34 ஆயிரத்து 168 ரூபாய் சிபிஎம் வேட்பாளருக்கும், 2 கோடியே 36 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் சிபி ராதாவுக்கும் கடன் இருக்கிறதாம். ஆனால் கல்யாண சுந்தரத்துக்கு எந்த கடன் பாக்கியும் இல்லை. அக்மார்க் வேட்பாளர் ஆக.. கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரைவிட சொத்து குறைவாக உள்ளதும், எந்த வழக்கும் இதுவரை இல்லாததும், முக்கியமாக தன் வாழ்க்கையில் கடனே இல்லாத ஒரு “அக்மார்க்” வேட்பாளராக நம்ம வாத்தியார் இருக்கிறார்! இந்த அட்டவணைதான் கோவை மக்களிடையே வேகமாக பகிரப்பட்டு வருகிறது!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *