இலங்கை வெடிகுண்டு  தாக்குதல்,   வருத்தத்தில் உலகம் – ஆர்.கே.

சில தினங்களுக்கு முன்பாக இலங்கையில், இயேசு உயிர்பித்து எழுந்து நாளில், இயேசுவை நினைவு கூறும் விதமாக சர்ச்களில் நடந்த பிரார்தனை கூட்டங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல் உலகை உலுக்கச் செய்துள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு எதிரான பாரிய யுத்தத்திற்கு பிறகு நடந்த மிகப்பெரும் உயிர் இழப்பு இது. 300க்கும் அதிகமானவர்கள் உயிர் இழந்துள்ளனர், 500க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

அப்பாவி தமிழ் மற்றும் சிங்களர்கள் மீது நடத்தப்பட்ட  இத்தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

எதும் அறியாத அப்பாவிகள் உயிர் இழந்துள்ளனர். இயேசு தான் மரிக்கும் போது கூறிய வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகிறது. ஞஎன் பிதாவே இவர்கள் இன்னது செய்கிறோம் என்று அறியாது செய்கிறார்கள். அவர்களை மன்னியும் என்றார். அத்துணை உயர்ந்த உள்ளம் நமக்கு இல்லை என்றாலும், அத்தகைய உயர்ந்த மனிதன் உயிர்தெழுந்த நாளில், அனேகர் உயிர் இழந்தது வருத்தமளிக்க கூடியதாக உள்ளது. அன்பையும், சமாதனத்தையும் வேண்டி இயேசு உலக மக்களுக்காக உயிர் துறந்தார். தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக பேசாது, அதை சகித்து  தன்னை கொடுமைக்கு ஆளாக்கியவர்களுக்காக,  பிதாவிடம் மன்னிக்க வேண்டினார்.

இக்கொடுமைகளை செய்தவர்களை உலகம் மன்னிக்குமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் மன்னிக்கக் கூடிய குற்றத்தை இவர்கள் செய்யவில்லை. இதன் பின்னணியில் சர்வதேச சதி மற்றும் உள்நாட்டு மத பிரச்னைகள் உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். எது எப்படியோ. இலங்கை மக்களின் துயரத்தில் பங்கேற்க வேண்டியுள்ளது. மீண்டும் இப்படியோரு நிகழ்வு நடக்காது இருக்க இலங்கையும், உலக நாடுகளும் கண்காணிக்க வேண்டும்.

அண்டை நாடான இந்தியா இதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. நடந்துள்ள வெடிகுண்டு தாக்குதலுக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். அவர்களின் உலகம் தழுவிய பயங்கரவாதம் நம் அண்டை நாடான இலங்கையை தாக்கியுள்ளது என்றால்,  அது நமக்கு விடப்படும் சவால் தான்.  இதை இந்தியா எப்படி சமாளிக்க போகிறது. அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாத்துக்கு துணை போவர்களை அடையாளம் கண்டு ஒடுக்க வேண்டும். அப்போதுதான்  மக்கள் அச்சமின்றி நடமாட முடியும்.

 

சர்வதேச சதி என்கிறார்கள். அப்படி என்றால் அது பொதுவெளியில் பகிரங்கமாக விவாதித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எத்தகைய சதித் திட்டத்தையும் முறியடிக்க நாடு தயாராக இருக்க வேண்டும். நாட்டிற்கு நாமும் துணை நிற்போமாக.

 

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *