[:en]எனது ஆன்மிகம் – 15 ஆர்.கே.o[:de]o[:]

[:en]

ஸ்ரீ இரமண மகரிஷி

நான் அடுத்ததாக உங்களுக்கு சொல்லப் போவது இரமண மகரிஷியை. ஸ்ரீ இரமண மகரிஷி உங்களுக்கு ஆன்மிகத்தில் எவ்வாறு வழிகாட்டுகிறார். அதில் என்னுடைய புரிதல் என்ன என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

மதுரை மாவட்டம் திருச்சுழி என்ற சிற்று£ரில் பிறந்தவர் ஸ்ரீஇரமண மகரிஷி.  தன் இளம் வயதில் மரண பயம் குறித்து எண்ணங்கள் வர. மரணத்தைக் கண்டு அஞ்சி நடுங்கி அதற்கு விடை தேடக் கிளம்பியவர். எல்லோருக்கும் மரண பயம் உள்ளது. ஆனாலும் அது குறித்து கவலை கொள்ளாது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம்.

ஆனால் உண்மை தேடுபவனுக்கு மரணம் ஏன் வருகிறது. மரணத்தை வெல்ல வழியில்லையா? என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கும். ஆக உள்ளத்தில் எழுந்த ஒரு பயத்தை போக்க வழி தேடி அவர் மதுரைக்கு வருகிறார். அங்கு உறவினர்  வீட்டில் சில காலம் தங்கிவிட்டு, திருவண்ணாமலை  நோக்கிச் சென்று, அங்கு தவத்தில் அமர்ந்துவிடுகிறார்.

நெடுநாள் தவத்திற்கு பிறகு அவரின் நிலை அறியப்பட்டு, அவரை தவநிலையில் இருந்து மீட்டெடுக்கின்றனர். அது முதற் கொண்டு எல்லோருக்கும் ஆன்மிகத்தை போதித்து வருகிறார்.

பக்தியின் சாயலில் அவரின் சில பகுதிகள் இருந்தாலும், உண்மையான ஆன்மிகத்தின் அடிப்படைக் கூறுகளையும் அவர் சொல்லாமல் இல்லை. இதை உணர்ந்து கொள்ள உலகமெங்கும் இருந்தும் ஆயிரக்கணக்கான ஆன்மிக தேடுதல் உடையவர்கள் அவரைக் காண திருவண்ணாமலை வரத் தொடங்கினர். சித்தர்கள்  வாழும் பூமி திருவண்ணாமலை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அதே சமயம் இரமண மகரிஷி  மூலமாக திருவண்ணாம¬லை உலகமெங்கும் பிரசித்திப் பெற்றது.

அவரின் அடிப்படை கருத்தாக நான் பார்ப்பது. நான் என்பதை ஒருவன் ஆய்வு செய்யும் பட்சத்தில் உண்மைக்கு அருகில் செல்கிறான் என்கிறார். நான் யார்? என்ற நு£லில் கேள்வி பதிலாக பல விளக்கங்களை தருகிறார். அவருடைய உரையாடல்கள் பல நு£ல் வடிவங்களாக வந்து, நமக்கு அவரின் கருத்துக்களை போதிக்கின்றன.

ஆக சுய விசாரணை அதுவும் மனதில் தோன்றும் எண்ணங்கள் எதற்காக, யாருக்காக என்பதை ஆய்வு செய்து கொண்டே வந்தால் அது இறுதியில் சுயமாகத்தான் இருக்கிறது. அப்படியாக உங்கள் சுயத்திலே எழும் எண்ணங்களை அங்கே விசாரணை செய்யும் போது, அது அடங்கிப் போகிறது. எல்லாவற்றையும் நடத்திக் கொண்டிருப்பன் இறைவன். அவன் மேல் நம்பிக்கை வைத்து, உன்னையறிந்தால், நீ அவனையும் அறிந்து கொள்ளலாம் என்று அறிவுறுத்துகிறார்.

தொடரும்…[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *