[:en]கடந்த 6 மாதங்களில் காஷ்மீரில் ஊடுருவிய 92 தீவிரவாதி சுட்டுக்கொலை[:]

[:en]

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

புதுடெல்லி: கடந்த 6 மாத காலத்தில், காஷ்மீரில் ஊடுருவிய 92 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் உதவியுடன் ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவல் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தீவிரவாதிகள் எல்லையோர கிராமங்களில் பதுங்கியிருந்து நாசவேலைக்கு திட்டமிடுகின்றனர். தீவிரவாதிகளின் திட்டத்தை பாதுகாப்பு படையினர் அவ்வப்பொழுது முறியடித்து வருகின்றனர். எல்லையோரங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியதுடன், அதிரடி தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்தவகையில், இந்தாண்டு தொடக்கம் முதல் ஜூலை 2ம் தேதி வரை காஷ்மீரில் ஊடுருவிய 92 தீவிரவாதிகள், ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்தாண்டு 79 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக கடந்த மே மாதம் வரை 124 வழக்குகள் பதிவாகியுள்ளது. தீவிரவாதம் தொடர்பாக 168 சம்பவங்கள் இந்தாண்டு நடந்துள்ளன. இது, கடந்தாண்டை காட்டிலும் அதிகம்.

காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் அடிக்கடி நடப்பது வழக்கமாக உள்ளது. இந்தாண்டு மட்டும் 142 கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாத அமைப்பின் தலைவர் புர்கான் வானி கடந்தாண்டு ஜூலை மாதம் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் எதிரொலியாக, அந்த மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 820 கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீரில் தீவிரவாதத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தீவிரவாதத்தை தூண்டுவோர்களுக்கு வரும் நிதி பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த 6 மாதங்களில் காஷ்மீரில் ஊடுருவிய 92 தீவிரவாதி சுட்டுக்கொலை கருத்துகளை தெரிவிக்க புதுடெல்லி: கடந்த 6 மாத காலத்தில், காஷ்மீரில் ஊடுருவிய 92 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் உதவியுடன் ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவல் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தீவிரவாதிகள் எல்லையோர கிராமங்களில் பதுங்கியிருந்து நாசவேலைக்கு திட்டமிடுகின்றனர்.

தீவிரவாதிகளின் திட்டத்தை பாதுகாப்பு படையினர் அவ்வப்பொழுது முறியடித்து வருகின்றனர். எல்லையோரங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியதுடன், அதிரடி தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். அந்தவகையில், இந்தாண்டு தொடக்கம் முதல் ஜூலை 2ம் தேதி வரை காஷ்மீரில் ஊடுருவிய 92 தீவிரவாதிகள், ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்தாண்டு 79 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக கடந்த மே மாதம் வரை 124 வழக்குகள் பதிவாகியுள்ளது. தீவிரவாதம் தொடர்பாக 168 சம்பவங்கள் இந்தாண்டு நடந்துள்ளன. இது, கடந்தாண்டை காட்டிலும் அதிகம். காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் அடிக்கடி நடப்பது வழக்கமாக உள்ளது. இந்தாண்டு மட்டும் 142 கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. ஹிஸ்புல் முஜாகிதின் தீவிரவாத அமைப்பின் தலைவர் புர்கான் வானி கடந்தாண்டு ஜூலை மாதம் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதன் எதிரொலியாக, அந்த மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 820 கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீரில் தீவிரவாதத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தீவிரவாதத்தை தூண்டுவோர்களுக்கு வரும் நிதி பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *