சீனா -அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக போர் -நெருக்கடி நிலை

சீனாவின் வாயை திறக்க விடாமல் அதிபர் டிரம்ப் அடித்த அ(இ)டி.!

சீனா -அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வருகின்றது.

சீனா மற்றும் அமெரிக்கா இரு நாடுகளிலும் ஒன்றன் நாட்டின் மீது இறக்கமதி செய்யப்படும் பொருட்களுக்கு மாறி மாறி வரி விதிப்பை அதிகப்படுத்திக் கொண்டன.

சீனாவின் வாயை திறக்க விடாமல் அதிபர் டிரம்ப் அடித்த அ(இ)டி.!

மேலும், அமெரிக்காவில் டிரம்ப் எடுத்த அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளதால், சீனாவில் தொலைத் தொடர்பு நிறுவமான ஹூவாய் மற்றும் இதோடு தொடர்புரைய 70 நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஹூவாய் மீது 2 தாக்குதல்:

சிறப்பு அனுமதி பெறாமல் அமெரிக்க தொழில்நுட்பங்களை வாங்க தடை, அமெரிக்க தொலைத்தொடர்பு நெட்ஒர்க்குகளில் தயாரிப்புகளை பயன்படுத்த தடை என, சீன நிறுவனமான ஹுவாய் மீது அதிபர் டிரம்ப் ஒரேநேரத்தில் இரட்டைத் தாக்குதலை தொடுத்துள்ளார்.

ராணுவ ரகசியம் கசியும் அச்சம்:

சீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால், தொலைத்தொடர்பு நெட்ஒர்க்குகள் வழியாக ஊடுருவி அரசு, ராணுவம் மற்றும் நிறுவனங்களின் தகவல் தொடர்புகள் சீனாவால் இடைமறிக்கப்படலாம் என்ற அச்சம் அமெரிக்காவில் நிலவுகிறது.

கருவிகள் வாங்க தடை:

இந்நிலையில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் தொலைத்தொடர்பு கருவிகளை அமெரிக்க நிறுவனங்கள் பயன்படுத்துவதை தடை செய்யும் வகையில், தேசிய நெருக்கடி நிலையை அதிபர் டிரம்ப் பிறப்பித்துள்ளார்.

ஹூவாய்-70 நிறுவனங்களுக்கு தடை:

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன், ஹூவாய் மற்றும் அதோடு தொடர்புடைய 70 நிறுவனங்களை அதற்கான பட்டியலில் அமெரிக்க வர்த்தக துறை இணைத்துள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *