பக்தவச்சலம்

எம். பக்தவத்சலம் எம். பக்தவத்சலம் (9 அக்டோபர் 1897 – 31 ஜனவரி 1987) தமிழ் நாட்டின்முன்னாள் முதலமைச்சரும் இந்தியநாட்டின் விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். விடுதலைப் போராட்டக் காலங்களில் அமராவதி சிறையில்அடைக்கப்பட்டு எண்ணற்ற இன்னல்களை அனுபவித்தவர். 1963 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் தமது நிருவாகத் திறனை திறம்பட வெளிப்படுத்தியவர்.இந்து சமய அறநிலையத்துறையின்திருக்கோவில்களின் நிதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், மாணவர் விடுதிகள் போன்ற சமுதாய நலத்திட்டங்களைத் தொடங்கலாம் என்ற சட்டத்திருத்தத்தைக் கொண்டுவந்தவர். எம். பக்தவத்சலம்தமிழக முதல்வர்பதவியில் 2 அக்டோபர் 1963 – 6 மார்ச்சு 1967முன்னவர்காமராசர்பின்வந்தவர்கா. ந. அண்ணாதுரைதனிநபர் தகவல்பிறப்புஅக்டோபர் 9 1897இறப்பு31 சனவரி 1987(அகவை 89) சென்னைஅரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்பிள்ளைகள்சரோஜினி வரதப்பன் 1960ஆம் ஆண்டு சோவியத் நாட்டின்அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் சென்று வந்த அவர், ‘இன்னும் இரு ஐந்தாண்டுத் திட்டங்களை நாம் நிறைவேற்றி விட்டால் நாமும் அவர்களது நிலையை அடைந்துவிடலாம், என்று அப்போதே நம்பிக்கையுடன் குறிப்பிட்டவர். அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் ஒரு மனிதாபிமான உணர்வோடு, மனிதநேய உணர்வோடு வாழ்ந்து காட்டியவர். * சென்னை ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நசரத்பேட்டையில் செல்வந்தர் குடும்பத்தில் (1897) பிறந்தார். இவருக்கு 5 வயதாக இருந்தபோது தந்தை காலமானார். தாய்மாமன்களின் ஆதரவில் வளர்ந்தார். சென்னையில் ஆரம்பக் கல்வி பயின்றார். * சென்னை சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். படித்து முடித்ததும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கினார். அது, இந்திய விடுதலைப் போராட்டங்கள் விறுவிறுப்பாக நடந்துவந்த நேரம். மகாத்மா காந்தி, அன்னிபெசன்ட், திலகர், விபின் சந்திரபால் ஆகிய தலைவர்களால் மிகவும் ஈர்க்கப்பட்டார். * வக்கீல் தொழிலை விட்டு, விடுதலைப் போராட்டத்தில் குதித்தார். 1936-ல் சென்னை மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எழுத்தாற்றல் கொண்டிருந்த இவர், ‘இந்தியா’ என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ‘தேசபக்தன்’ உட்பட பல பத்திரிகைகளில் ஏராளமான கட்டுரைகள் எழுதினார். * ஒத்துழையாமை இயக்கம், தனிநபர் சத்தியாக்கிரகம், ஆகஸ்ட் புரட்சி உள்ளிட்ட அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றார். சிறையில் ராஜாஜி நிகழ்த்திய பகவத்கீதை, கம்பராமாயண உரைகளைக் கேட்டார். அமராவதி சிறையில் இருந்தபோது பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானார். * தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத் துணைத் தலைவராக இருந்தார். சென்னை மகாஜன சபா செயலாளராக 4 ஆண்டுகள் செயல்பட்டார். மது ஒழிப்பு இயக்கத்தில் பங்கேற்றார். சைமன் கமிஷன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது, போலீஸ் தடியடியில் காயமடைந்தார். * நாடு விடுதலை பெற்றதும், தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1946 முதல் 1962 வரை பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். 1963-ல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். தனது ஆட்சிக்காலத்தில், ஏராளமான மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டுவந்தார். * திருக்கோயில்கள் நிதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள், மாணவர் விடுதிகள் உள்ளிட்ட சமுதாய நலத் திட்டங்களைத் தொடங்கலாம் என சட்டத் திருத்தம் கொண்டுவந்தவர். ரூ.5 லட்சம் நிதியுதவி செய்பவர் களின் பெயரிலேயே கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவித்து, பணக்காரர்கள் பலரையும் கல்வி வளர்ச்சியில் பங்கேற்கச் செய்தார். * தமிழ், ஆங்கிலத்தில் நல்ல புலமையும், தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்டவர். சிறந்த பக்தர். ‘எனது தமிழாசிரியர் உ.வே.சாமிநாத ஐயர், ஆங்கில ஆசிரியர் ஹென்றி ஸ்டோன், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் எனது தர்க்கப் பேராசிரியர்’ என்று கூறுவாராம். சிறந்த ஆற்றலும், அறிவுக்கூர்மையும் நிறைந்தவர். * ‘இவரோடு பழகுவது பல்கலைக்கழகத்தில் படிப்பதற்குச் சமமானது’ என்று இவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். அரசியல் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மனிதநேய உணர்வோடு வாழ்ந்தவர். பொது வாழ்விலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நேர்மை, தூய்மையைக் கடைபிடித்தவர். சட்டப்பேரவையில் எப்படி நடந்துகொள்வது என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். எதிராளிகளின் மனம் புண்படாமல் தனது கருத்தைச் சொல்வதில் வல்லவர். * மிக எளிமையானவர், எதிர்க்கட்சியினரும் விரும்பும் தலைவராக விளங்கியவர், தலைசிறந்த தேசியவாதி, மக்கள் நலனையே பெரிதாக நினைப்பவர், சிறந்த நிர்வாகி என்றெல்லாம் போற்றப்பட்ட எம்.பக்தவத்சலம் 90-வது வயதில் (1987) மறைந்தார். தமிழ்நாடு அரசு எம்.பக்தவத்சலம் நினைவைப் போற்றும் வகையில்சென்னை கிண்டியில் அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவிடம் அமைத்து, எம்.பக்தவத்சலம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *