புதுடில்லி : மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையை இன்று( ஏப்.8) வெளியிடுவதாக தெரிவித்தார். 

புதுடில்லி : மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கையை இன்று( ஏப்.8) வெளியிடுவதாக தெரிவித்தார்.

லோக்சபா தேர்தலுக்கான மக்கள் நலதிட்டங்கள் பட்டியலில், காங்., அரசு மாதம் ரூ.6000 உள்ளிட்ட பல திட்டங்களை அறிவித்துள்ளது. இது போன்று மக்களை கவரும் வேறு எந்த மாதிரியான திட்டங்களை பா.ஜ அறிக்கையில் வெளியிடும் என்று பல கட்சிகளும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தன. இந்நிலையில் டில்லியில் ‘ மத்தியில் மீண்டும் மோடி அரசு ‘ என்ற தலைப்பில் பா.ஜ.கவின் தேர்தல் பிரசார பாடலை நேற்று வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது : இந்த பிரசார பாடலில் , பா.ஜ அரசு கொடுத்த வாக்குறுதிகள் ,ஊழலற்ற ஆட்சி மற்றும் நாட்டின் பாதுகாப்பு , வளர்ச்சி போன்ற கருத்துகளையும் சுட்டிக்காட்டி உள்ளோம். பல கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையை நம்பியே தேர்தல் களத்தில் இறங்கி உள்ளன. ஆனால் நாங்கள் , பா.ஜ அரசு கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகள் மற்றும் நிறைவேற்றிய வாக்குறுதிகளை கூறியே ஓட்டு கேட்டு வருகிறோம்.

ஏழை மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வருகிறோம். நடுத்தர மக்கள் முன்னேற்றம் குறித்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் எதுவும் கூறவில்லை. ஆனால் மோடி அரசு நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாகவும் , பாதுகாப்பாகவும் இருந்து வருகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் பா.ஜ., பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். அதன் முன்னோட்டமாக எங்கள் தேர்தல் அறிக்கை இன்று (ஏப். 8 ) வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *