[:en]பொறியியல் மாணவி தற்கொலை: கல்லூரி பொருள்களைச் சேதப்படுத்திய மாணவர்கள்[:]

[:en]

சென்னை: சென்னையில், தனியார் பொறியியல் கல்லுாரி மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்; இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள், கல்லுாரி வளாகத்தில் உள்ள, விடுதியை தீ வைத்து கொளுத்தினர்.

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தைச் சேர்ந்தவர், ராஜரெட்டி, 50. அவரது மகள், ராக மவுனிகா,19; மகன், ராகேஷ், 19 இருவரும் இரட்டையர்கள். சென்னை, சோழிங்கநல்லுார் பகுதியில் உள்ள, சத்யபாமா பொறியியல் கல்லுாரியில், பி.இ., முதலாம் ஆண்டு படித்து வந்தனர். அதே கல்லுாரி வளாகத்தில் உள்ள, விடுதியில், முதல் மாடியில் உள்ள அறையில் மவுனிகா தங்கி இருந்தார்.

நேற்று, கல்லுாரியில், மாதாந்திர தேர்வு நடந்தது. அப்போது, மவுனிகா, தன் பக்கத்தில் தேர்வு எழுதிய சக மாணவியின் விடைத்தாளை பார்த்து, ‘காப்பி’ அடித்து எழுதியதாக கூறப்படுகிறது.

 

இதனால், தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பேராசியர், மவுனிகாவை கண்டித்தார். இதையடுத்து, உடனடியாக தேர்வு அறையிலிருந்து வெளியேறிய மவுனிகா, விடுதி அறைக்கு சென்றார். பின், தன் மொபைல் போனில், அதே கல்லுாரியில் படிக்கும், தன் சகோதரர், ராகேஷுக்கு,’ உங்களை விட்டு பிரியப்போகிறேன்; என்னை மன்னித்துவிடுங்கள்’என, ஆங்கிலத்தில், எஸ்.எம்.எஸ்., அனுப்பினார். தேர்வு முடிந்ததும், மொபைல் போனை, ‘ஆன்’ செய்து பார்த்த, ராகேஷ், சகோதரி அனுப்பிய தகவலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து, மவுனிகா தங்கியிருந்த அறைக்கு சென்றார். உள் பக்கம் பூட்டப்படிருந்த அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மின் விசிறியில் துாக்கில் தொங்கிய நிலையில், மவுனிகாவை பார்த்து, கதறி அழுதார். தகவல் அறிந்து ஏராளமான மாணவர்கள் திரண்டனர். மவுனிகாவின் நண்பர்கள், அவரின் உடலை மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். எனினும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம், கல்லுாரி மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. செம்மஞ்சேரி போலீசார் மாணவியின் உடலை பிரேதபரிசோதனைக்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விடுதிக்கு தீ வைப்பு : ராக மவுனிகா தங்கியிருந்த அறைக்கு, நேற்றிரவு சென்ற மாணவர்கள், அங்கு தங்கியிருந்த மாணவியரை வெளியேறச் செய்தனர். அதன் பின், அந்த விடுதி அறைகளில் பெட்ரோல் ஊற்றி, தீயிட்டு கொளுத்தினர். இரு சக்கர வாகனங்கள், விலை மதிப்பு மிக்க பொருட்களை அடித்து உடைத்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தீயணைப்பு வீரர்களுக்கு மிரட்டல் : தகவல் அறிந்து, செம்மஞ்சேரி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், மாணவர்கள், தீயணைப்பு வாகனத்தை கல்லுாரிக்குள் நுழைய விடாமல் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீர்களுக்கு மிரட்டலும் விடுத்தனர். அதற்குள் செம்மஞ்சேரி போலீசார் பெரும்படையுடன் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர். போலீசாரை பார்த்ததும் மாணவர்கள் ஓட்டம் பிடித்தனர். அதன் பின், தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று தீயை அணைத்தனர். தீயணைப்பு பணி நள்ளிரவு வரை நீடித்தது. இச்சம்பவம் குறித்து, செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *