பொள்ளாச்சி : காணாமல் போன கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை

திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரது மகள் பிரகதி. இவர், கோவையில் அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று திடீரென காணாமல் போனதாக இவரது பெற்றோர், கோவை காட்டூர் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி அருகே  பூசாரிபட்டி வாய்கால்மேடு பகுதியில் இளம்பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், கொல்லப்பட்டு  கிடந்த அந்தப்பெண், கோவையில் காணாமல் போன கல்லூரி மாணவி பிரகதி என்பது  தெரியவந்தது. இவர், பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *