[:en]எனது ஆன்மிகம் – 10 ஆர்.கே.[:]

[:en]

 

அடுத்த வழி புத்தியின் தொடர்பால் அதை உணர்வது. பக்திக்கு அடுத்த நிலையாக இதைச் சொல்லலாம். இதற்கு ஒரு பண்பட்ட மனநிலை தேவையாக இருக்கின்றது. நீங்கள் பக்தியை முடித்தவராக இருக்க  வேண்டும்.  இல்லை பக்தியில் ஆழமாக சென்றவராக இருக்க வேண்டும். அவ்விதம் எனில் இதன் விஷயங்கள் உங்களை எளிதில் வசீகரிக்கும். அதன் வழிகள் உங்களுக்கு ஒரு அன்பான அழைப்பாக இருக்கும். அப்படியாகத்தான் எண்ணற்ற இறையடியார்கள், ஞானிகள், சித்தர்கள், அறிஞர்கள் என்று எண்ணற்றவர்கள் வழிகாட்டியுள்ளனர். இவர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர்கள் அமைப்புகளாக மாறி அவர்கள் கருத்துக்களை உலகமெங்கும் பரப்பும் வேளையில் ஈடுபட்டார்கள்.

இவைகள் தான் ஆன்மிக அமைப்புகள் என்று சொல்லப்படுகிறது. எண்ணற்ற ஆன்மிக அமைப்புகள் உலகமெங்கும் உள்ளன. குறிப்பாக உலகை கிழக்கு, மேற்காக பார்க்கும் போது, கிழக்கு பகுதியில் ஆன்மிகமும், மேற்கு பகுதியில் விஞ்ஞானமும் தலைத்தோங்கி உள்ளது. கிழக்கு பகுதியான இந்தியாவில் மிகச் சிறந்த ஞானிகள் உருவாகியுள்ளனர். அவர்களின் கருத்துக்கள் உலமெங்கும் மக்களை அவர்கள்பால் ஈர்த்துள்ளது.  அவ்வற்றில் சிலவற்றை நான் பயணித்த அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் ஹிந்து மதம் சார்ந்து கடவுள் கொள்கையை பரப்பும், அதன் தத்வத்தை ஆராயம் பல அமைப்புகள் இருக்கின்றன. அதன் வேராக இருப்பது ஹிந்து மத வேதங்கள். ஹிந்து மதத்தில் நான்கு வேதங்கள் சுட்டப்படுகின்றன. அது ரிக், யஜூர், சாம, அதர்வண வேதம் என்று சொல்லப்படுகிறது. இவைகள் அனைத்தும் வேத கால ரிஷிகளால் உணரப்பட்டு, இறைவனால் அருளாப்பட்ட வாக்கியங்களாக சொல்லப்படுகிறது. பல ரிஷிகளின்பால் வெளிப்பட்ட கருத்துக்களை தொகுத்து அளித்தவர்தான் வேத வியாசர் என்ற முனிவர். இது இந்தியாவின் வடபகுதியில் வாழ்ந்த முனிவர்களால் இயற்றப்பட்டது. இவர்கள் வாழ்ந்த காலம் வேத காலம்  என்று சொல்லப்படுகிறது. இன்றைக்கு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள காலத்தை வேத கால நாகரிகம் என்று சொல்கிறார்கள்.

வேதத்தில் கடவுளோடு தொடர்பு படுத்திக்கொள்ள அவர்கள் உபயோகித்த கருவி நெருப்பு. நெருப்பின் வழியேதான் கடவுளை சென்றடைய முடியும், கடவுளுக்கு  பிடித்தமான பொருள்களை கொடுக்க முடியும் என்று நம்பினார்கள். ஆக நெருப்பை அவர்கள் தேர்தெடுத்தர்க்கு சொல்லப்படும் காரணம் நெருப்பு எதனாலும், தனது து£ய்மையை இழக்காது. எல்லாற்றையும் எரித்து தன் சுயத்தில் நிற்பது. அதை யாரும் அசுத்தப்படுத்த முடியாது. நெருப்பு எல்லாற்றையும் சுத்தப்படுத்தக்  கூடியது. தனது சக்தியால் எல்லா வேண்டாத குப்பைகளையும் அழித்து ஒழிக்க கூடியது.

நெருப்பு ஜூவாலையாக பற்றி படரக் கூடியது.  எந்த ஒரு பொருளையும் தனது தன்மைக்கு மாற்றக் கூடியது. சூரியன் ஒரு நெருப்புக் கோள், அதுவே இந்த பூமிக்கு ஒளியாகவும், வழியாகவும் உயிர்கள் வாழ உற்ற துணையாகவும் இருப்பது.

அத்தகைய நெருப்பே ஹிந்து மதத்தின் அடிப்படை சாதனமாக உள்ளது கடவுளை சென்றடைவதற்கு. அந்த நெருப்பை எவ்வாறு அவர்கள் உபயோகப்படுத்துகிறார்கள் என்றால் அதற்கு ஒரு குண்டம் அமைத்து சில பொருள்களை போட்டு நெருப்பை அந்த குண்டத்தில் வளர்க்கிறார்கள். பசுவினால் கொடுக்கப்படும் சுத்த நெய் அந்த குண்டத்தில் நெருப்பை வளர்த்தெடுக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு யாகம் வளர்த்தல், வேள்வி குண்டம் என்று சொல்லப்படுகிறது. சமஸ்கிரதத்தில் யஞ்யம் என்கிறார்கள்.

தொடரும் ………

 [:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *