இயற்கையின் நீர் பாதுகாப்பு அரண்

Advertisements

வரலாறு காணாத வறட்சி தமிழகத்தில் 118 ஆண்டுகளுக்கு முன்பாக ஏற்பட்ட வறட்சிக்கு பின்பாக மற்றுமொறு வறட்சி தமிழக மக்களை தாக்கி உள்ளது.

சென்னையை தாக்கிய வரலாறு காணாத மழை, வரலாறு காணத வார்தா புயல் என்று இன்னும் எத்தனை வரலாறு காணத இயற்கை பேரழிவுகளுக்கு நாம் பலியாக போய்கிறோமோ என்ற அச்சம் தலை து£க்கியுள்ளது.

மனிதனின் இயற்கை விரோத நடவடிக்கைகள், எதிர்வினையாக அவனை தாக்குவதை அவன் அறிந்துள்ளனா, இல்லையா என்ற கேள்வி எழுகிறது. சமூக, பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அவசரத்தில் நிதானம் இழந்து, இயற்கை வளங்களை அழிப்பது நம் மனித சமூகத்தை அழிவுக்கு இட்டுச் செல்லும் பாதையை நாமே அமைத்துக் கொள்கிறோம் என்பதை அனைவரும் அறிந்திருக்கிறோமா? இல்லையா என்பதே கேள்வி. இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த அறியாமை?  மக்களும், ஆளும் அரசாங்களும் போர்கால அடிப்படையில் இயற்கை ஆதாரங்களை காக்க வேண்டிய வேலைகளை செய்யவில்லை என்றால் மிக கொடிய பஞ்சங்களையும், பேரழிவுகளையும் சந்திக்கப் போகிறோம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

உலகலாவிய அளவில் இயற்கை சமநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதின் விளைவாக இந்நிலைகளை சந்திக்கிறோம் என்று சொன்னாலும். அதில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள, ஏற்பட்டுள்ள விளைவை சரி செய்ய என்ன நடிவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது என்பது கேள்வி?

சமீபத்திய தண்ணீர் தட்டுப்பாடு தமிழகத்தை உலுக்கி வருகிறது. ஓட்டு மொத்த தமிழகமும் தண்ணீருக்காக ஏங்கும் நிலையில் நமது ஆட்சியாளர் தவிக்கவிட்டுள்ளனர். எத்தகைய சூழ்நிலைகளையும் சமாளிக்க வேண்டிய அரசு, மக்களை கண்டு கொண்டதாகவே தெரிவில்லை. கிராமங்களில் ஒரு குடம் தண்ணீருக்காக பல மைல்கள் நடந்து சென்று நீராதரங்களில் உள்ள தண்ணீரை எடுத்து வர வேண்டியுள்ளது. அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளை அரசங்கம் செய்துள்ளதாக எந்த தகவலுமில்லை.

அன்றாடம் தண்ணீருக்காக மக்கள்தான் தவிக்கின்றனர் என்றால், நம்மை சார்ந்துள்ள உயிரினங்களான ஆடு, மாடு, கோழி மற்றும் காட்டு விலங்குகளும் தண்ணீர் இன்றி மாண்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.

இந்நிலையில் மதுரை வைகை அணையில் உள்ள தண்ணீரை பாதுகாக்க தெர்மால் கூல் என்கின்ற அட்டை மூலம் தண்ணிரை பாதுகாக்க போகிறோம் என்று கூறி மக்களின் பரிகாசத்துக்கு உள்ளாகி உள்ளது அரசு. தெர்மால் கூலால் மூடுவது அறிவியல்பூர்வமானதா? இல்லையா? என்பதல்ல கேள்வி. அதை செயல்படுத்திய முறைதான் கேலிக்குரியதாக அமைந்தது. அரசின் செயல்பாடுகள் இப்படிப்பட்டதாக இருப்பதின் மற்றோரு உதாரணம் தான் எண்ணு£ர் கடற்பகுதியில் பரவிய ஆயில் கழிவுகளை பக்கெட்டில் அகற்றிய விவகாரம். மத்திய அரசும் சரி, மாநில அரசும் சரி மக்களின் முன் அம்பலப்பட்டு போய் உள்ளனர்.

தண்ணீரை பாதுகாக்க இயற்கையான பாதுகாப்பு அரண்கள் யாது என்று கண்டறியாமல். செயற்கை வழி முறைகளை பின்பற்றி தோல்வி காண்பது தான் அரசுகளின் வழிமுறைகளாக உள்ளது.

இந்நிலையில் நடந்தது நடந்ததாக இருக்கட்டும். நடப்பபை நல்லவையாக இருக்கட்டும் என்ற நோக்கோடு, நமது நீராதாரங்களையும், இயற்கை வளங்களையும் பாதுகாப்பதை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கும், அரசாங்கத்தை நிர்வகிப்பவர்களுக்கும் கட்டாயமாக்க வேண்டும். இதை அறிந்தே தவிர்ப்பார்களேயானால் அவர்களை காக்க கடவுளாலும் முடியாது என்பதே உண்மை.

You may also like...

Leave a Reply