பூமியை போன்ற கோள்… நாசாவின் புதிய கண்டுபிடிப்பு!

Advertisements

சூரியனின் சுற்றுவட்டப் பாதையில் புவி எந்த தொலைவில் இருக்கிறதோ அதே தொலைவில் புதிதாக ஒரு கிரகத்தை நாசா கண்டறிந்துள்ளது. அதன் சூரியன் மிகச்சிறிய அளவிலேயே உள்ளது. இந்த கிரகம், சரியாக நமது சூரியனில் 7.8 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. இதனை  நாசா இன்னும் ஒரு நட்சத்திரம் என்று அறிவிக்கவில்லை. இதில் மனிதர்கள் வாழும் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்றும் கூறியுள்ளது நாசா.

இந்த கோளுக்கு OGLE-2016-BLG-1195Lb என்று பெயரிடப்பட்டுள்ளது. இது 13,000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ள ஒரு கோளாக இருக்கிறது. மைக்ரோ லென்சிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தக் கோளை கண்டறிந்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இது ப்ளூட்டோவை விட குளிர்ச்சியான ஐஸ்பால் கிரகம் என்றும் நாசா கூறியுள்ளது. இந்த கிரகம் அதன் சூரியனிலிருந்து இருக்கும் தொலைவு, சுற்றுவட்டப்பாதை மற்றும் எடையை வைத்து பூமியை போன்ற கிரகமாக நாசா கூறியுள்ளது.

You may also like...

Leave a Reply