மீண்டும் 30,000 புள்ளிகளுக்கு கீழே சென்செக்ஸ்

Advertisements
மே 1-ம் தேதி மகாராஷ்டிரா மாநில தினத்தை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதற்கு முன் வாரத்தின் இறுதிநாளான வெள்ளிக்கிழமை, சர்வதேச சந்தைகள் பலவீனமான நிலையில் வர்த்தகமாகி வந்ததால் சென்செக்ஸ் 30,000 புள்ளிகளுக்கு கீழே வர்த்தகமானது. பங்குச் சந்தை புதிய உச்சத்தை எட்டியதால் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்த காரணத்தினால் சந்தை சரிவடைந்தது.
இந்த நிலையில் இன்று (2.5.17) காலை நேர வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தை சற்று இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. காலை வர்த்தகத் தொடக்கத்தில் சென்செக்ஸ் 120 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமானது. நுகர்வோர் சாதனங்கள், பிஎஸ்யூ, மெட்டல், ஆட்டோ, வங்கி, ஐடி துறை சார்ந்த பங்குகள் உயர்ந்து காணப்பட்டன. மாருதி சுஸுகி, ஹீரோ மோட்டோ கார்ப், ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ, எச்டிஎஃப்சி லிமிடெட், ஏசியன் பெயிண்ட், டிசிஎஸ், டாடா ஸ்டீல், எஸ்.பி.ஐ., ஆக்சிஸ் வங்கி, அதானி போர்ட்ஸ், ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனப் பங்குகள் உயர்வடைந்து காணப்பட்டன. எனினும் இப்போது சந்தையைப் பொறுத்தவரை சென்செக்ஸ் 30,000 புள்ளிகளுக்கு கீழ் இறங்கி தடுமாற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 7.80 புள்ளிகள் குறைந்து 9296.25 நிலையில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் 27.87 புள்ளிகள் குறைந்து 29890.53 என்ற நிலையில் வர்த்தகமானது.
விலை அதிகரித்த பங்குகள்
ஓஎன்ஜிசி 192.65
மாருதி சுசூகி 6,647.95
பிபிசிஎல் 732.45
எச்டிஎப்சி 1,562.55
பஜாஜ் ஆட்டோ 2,902.00
விலை குறைந்த பங்குகள்
அம்புஜா சிமெண்ட்ஸ் 237.50
ஏசிசி 1,580.50
டாடா மோட்டார்ஸ் (டி) 272.60
அல்ட்ராடெக் சிமென்ட் 4,177.15
டாடா மோட்டார்ஸ் 451.50

You may also like...

Leave a Reply