கட உள் வழி ஆன்மீகம்

Advertisements

கடவுளை நம்பைப்போல அல்லது நமக்கும் மேலே வாழ்ந்த ஒருவராக வைத்துக்கொண்டு ஆன்மீகத்தை ஆராய்வது அறியாமையாகும். பல மதங்கள் மனிதனால் உருவாக்கப்பட்டதால் அதைப்போன்றதே இந்து மதம் என்று அதில் உள்ள அவதார புருஷர்கள் தான் நம் இந்து மதத்தை உருவாக்கியவர் கள் என்று அவர்கள் செய்த தவறு மூடம் என ஆராயாமல் ஏன் எதற்கு இப்படிப்பட்ட கதைகள் இடையில் சொருகப்பட்டது எனப் பாருங்கள்.

உளவியல் வகையில் நாம் வாழும் காலத்தில் நடப்பதைப்பற்றி அதன் குற்றம் குறைகளைப்பற்றி பேச ஆரம்பித்தால்

நாம் நம் அடிப்படை நிலையை விட்டு இருக்கும் நிகழ்காலத்தையே உண்மை அல்லது தரம் நம் தேவை என மாறிக்கொண்டே போய் உண்மையான தரம் தர நிர்ணயம் செய்ய எதுவும் இல்லாமல் போய்விடும் என்ற வகையில் பார்த்தால் நாம் இருக்க வேண்டிய தரம் நம் புராணங்களில் இதிகாசங்களில் தான் உள்ளது. என்ன குறை என்றால் அதை தற்காலத் தேவைக்கு ஏற்ப மாற்றாமல் நாத்தீகம் என்றும் அறிவியல் என்று ஆன்மீகத்தை விட்டு வெளியே வந்ததால் உலகத்தின் மேலே சந்தேகம் வந்து பாழாகியுள்ளோம். தன்னைத்தவிர எதன் மேலும் நம்பிக்கையில்லாமல் போகக்காரணம் மனிதனால் உருவாக்கப்பட்ட சுய நல அடிப்படையிலான சட்டங்களாகும். எந்த மனித இனமும் தன் இனத்தைத்தவிர பொதுவான தீர்வு வேண்டும் என எண்ண மாட்டார்கள். இதைத்தான் நாம் முதலாளித்துவம் என்கிறோம். நாம் நமது அளியாமையால் வெறுத்தொதுக்கும் ஆன்மீகத்தில் நமக்கான அனைத்துத் தீர்வுகளும் உள்ளன என்றால் நம்புங்க (மதம் சார்ந்த ஆன்மீகமல்ல நான் சொல்ல வருவது)

நமது அறியாமையே மதம் என்றால் ஆன்மா மறுபிறவி என நம்முன் வைத்து அதற்காக நம்மை ஆயத்தப்படுத்துவதாக உள்ள மதத்தை ஆராய்வதாகும். தற்காலிகமாக இவற்றை விட்டு நான் அறிந்த நம் தமிழ் மொழியுள் உள்ள கடவுள் வாழ்த்தைப்பற்றி மற்றும் கற்காலம் முதல் உள்ள கட உள் வழி பார்த்தல் என்ற உடல் மனம் உயிர் சார்ந்த சமச்சீர் சமய நெறி என்ற தத்துவங்களை விளக்கும் அறிவியலாக மக்கள் முன் உரைக்க உள்ளதை கவனியுங்கள்.

நாளை கட உள் வழி பார்த்தலை அறிந்தபின் அனைத்து மத மேல் நிலை ஆன்மீகத்துக்கும் பொருள் விளங்கும் வகையாக இது உள்ளது என்பதால் தான் கட உள் வழி பார்த்தலை கற்றுக் கொள்ளும் எண்ணம் கொள்ளுங்க எனகிறேன்.

இதற்கான எனது தேடலில் நான் கண்டறிந்தவை தமிழ் மொழியின் இரகசியங்களாக உள்ளன இவை ஏனோ மறக்கப்பட்டு மறைக்கப்பட்டனவோ என்ற அச்சமும் உள்ளது.

ஏனென்றால் ஆன்மீகம் என்று ஆன்மாவுக்காக இவ்வளவு மெனக்கெட்ட நம் முன்னோர் உடல் மனம் உயிர் என்ற வகையில் மொழியுள் பல பிரிவுகளை தந்து சென்றுள்ளதை கவனியுங்கள்.

யோகா சித்தா கலைகள் என்று வர்மம் களரி பரதம் என்றும் மற்ற மொழிப்பிரிவுகளான இயல் இசை நாடகம் நாட்டியம் கவிதை எனப்பலவும் கடவுள் வாழ்த்தை முன்னிறுத்தியும் அவர்களும் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டே தங்கள் படைப்புகளை உருவாக்கி மக்களை நல்ல வகையில் வாழ வழி செய்தார்கள்.

இந்த வகையில் நான் நம் மொழியுள் உள்ள மூலப்பிரிவாக இந்த கட உள் வழி பார்த்தல் இருந்துள்ளதாக கருதுகிறேன். இதுவே சமச்சீர் சமய(கால) நெறியாக இயற்கையின் ஐம்பூதங்களையும் கவனத்தில் கொண்டு இப்புவியை பண்படுத்தவும் அப்படியே நம்மை நம் ஆன்மாவை பண்பட்டதாக வைத்துக்கொள்ள இருக்கும் மூலம் அல்லது அடித்தளம் என்ற வகையில் உள்ளதுங்க.

இக்காலத்தில் இதை மறந்து நாம் மற்ற மதங்களுடன் போட்டி போட்டு அவர்கள் சொல்லும் ஆன்மா மறுபிறவி மறுமைத்தீர்ப்பு என்று அவர்களிடம் உள்ளதை பற்றியே பேசுவதால் அறிவியலாருக்கு மதங்கள் சொல்பவை அர்த்தமில்லாத ஒன்றாகி ஆன்மீகத்தை வளர்க்காமல் மூடமாக முடமான வாழ்க்கை வாழ்கிறார்கள்.

நான் அறிந்த நம் தமிழ் மொழியின் பழமையான கட உள் வழி என்ற உடல் மனம் உயிர் சார்ந்த ஆன்மீகம் வேறெங்கும் இல்லை. இது மதம் சாராத ஆன்மீகம் கற்பித்தல் என்பதால் நாளை யோகா போல உலகம் முழுக்க பரவும் என்பது நிச்சயம் நடக்க சாத்தியம் உள்ளதுங்க.

நமது புராணங்கள் வேதங்கள் இதிகாசங்கள் என்பவற்றில் உள்ள பல கதைகளும் நமது உடல், பாகங்கள் மற்றும் அதன் இயக்கங்கள் மேல் பொருத்தினாலும் (கடவுள் உருவங்கள் என்ற ஒன்றை ) கண கச்சிதமாக அறிவியலார் ஏற்றுக்கொள்ளும் வண்ணமே உள்ளதே எனக்கும் ஆச்சரியமான ஒன்றாக உள்ளது. நம் முன்னோர்கள் இதையே சூட்சுமமாக கடவுள் கற்சிலைகளில் மறைத்து செய்முறை விளக்கங்கள் காட்ட பார்ப்பணர்களை வைத்துசென்றதாகவும் எனக்குப்படுகிறதுங்க.

You may also like...

Leave a Reply