பாகிஸ்தானில் உள்ள சிவன் கோயிலில்

Advertisements

பெஷாவர்: பாகிஸ்தானில் உள்ள சிவன் கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்துக்கள் வழிபாடு நடத்த அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பாகிஸ்தானின் கைபர் பகதுன்கவா பகுதியில் உள்ள அபோதாபாத்தில் சிவன் கோயில் அமைந்துள்ளது. அங்குள்ள இந்துக்கள்  சிவன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தி வந்தனர். இந்நிலையில் சொத்து தகராறு காரணமாக கோயில் மூடப்பட்டது. இதனால் சுமார் 20 ஆண்டுகளாக அங்கு வழிபாடு நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்த சூழலில் கடந்த 2013ம் ஆண்டு இந்து அரசுசாரா தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று இந்த கோயில் அமைந்துள்ள இடத்தை அதன் உரிமையாளரிடம் இருந்து குத்தகைக்கு எடுத்துள்ளது.  இதையடுத்து அங்கு இந்துக்கள் வழிபாட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை ஐகோர்ட்டின் நீதிபதிகள் அடீக் ஹூசைன் ஷா தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. அண்மையில் இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் சிவன் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு சிவன் கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி கிடைத்துள்ளதையடுத்து அப்பகுதியில் வசிக்கும் இந்துக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

 

You may also like...

Leave a Reply