துரித உணவுகளின் விளம்பரங்களுக்கு தடைவிதிக்க வேண்டும்

 

 

புதுடெல்லி: ஃபாஸ்ட் புட் எனப்படும் துரித உணவுகளின் விளம்பரங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும், அவற்றுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது. இந்தியாவில் ஆரோக்கியமான உணவுகளை தவிர்த்துவிட்டு ஃபாஸ்ட் சாப்பிடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஃபாஸ்ட் புட் உணவுகளை சாப்பிடுவதால் உடல் பருமன், நீரிழப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுவதாக மருத்தவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

எனினும் யாரும் அதை பொருட்படுத்துவதில்லை. ஒருசில பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு ஃபாஸ்ட் புட் உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகள் மற்றும் பழங்களை வாங்கி தருகின்றனர். ஆனால் விளம்பரங்களால் ஈர்க்கப்பட்ட சிறுவர்கள் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்படும் ஃபாஸ்ட் புட் உணவகளை வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் சிறுவர்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் ஃபாஸ்ட் புட் உணவுகளை சாப்பிடுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சிறுவர்களை ஈர்க்கும் வகையில் வெளியிடப்படும் ஃபாஸ்ட் புட் தொடர்பான விளம்பரங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவை அதிகளிவில் கலக்கப்பட்ட உணவுகளை சிறுவர்கள் சாப்பிடுவதால் அதிக உடல் எடை, உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. ஃபாஸ்ட் புட் விளம்பரங்களில் பிரபலங்கள் நடிப்பதை ஊக்குவிக்க கூடாது என்றும், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் ஃபாஸ்ட் புட் உணவுகளுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகள் சாப்பிடுவதா ஊக்குவிக்க ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வை விளம்பரங்கள் மூலம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com