கடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும்

Advertisements

ஒரு சேல்ஸ் செமினாரில் பயிற்சியாளர் கூட்டத்தினை பார்த்து,

“நாட்டில் மிகவும் பணக்கார கோவில் எது…?” ன்னு கேட்டார்….

எல்லாரும் ஒரே குரலில் திருப்பதி வெங்கடாசலபதி னு சொன்னாங்க….

“ஏன்…. பதில் தெரியுமா”…ன்னு கேட்டார் பயிற்சியாளர்…..

ஆளாளுக்கு ஒரு பதில் சொன்னாங்க…..

அவுங்க பதில்ல திருப்தி அடையாத பயிற்சியாளர் சொன்னார்…..

“எத்தனையோ இடங்களில் பெருமாள் கோவில் உள்ளது…. ஆனால், திருப்பதில மட்டும்தான் சாமி இரவு 12 மணிவரை பக்தர்களை பார்த்து ஆசீர்வதிக்கிறார்….. மீண்டும் காலைல 3 மணிக்கு எழுந்து தரிசனம் குடுக்கறார்…. பகலில் ஓய்வு கூட எடுப்பதில்லை…மற்ற, கோவில்களில் இரவு 9 மணிக்கு நடை சாத்துகிறார்கள்… பகலில் ஓய்வு உண்டு…. ஆகையால் கடுமையாக உழைத்தால் தான் செல்வம் பெருகும் என்பது கடவுளுக்கே பொருத்தும்போது நமக்கு பொருந்தாதா….. என்று கேட்டார்….

படித்ததில் பிடித்ததும் பகிர்ந்தது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com