போதி தர்மன் சொன்னான்- ஓஷோ

போதி தர்மன் சொன்னான்…..

புத்தன் சிரிக்காமலேயே சிரித்துக் கொண்டிருக்கிறார் என்று…..

யாருமே இதுவரை புத்தன் சிரித்துக் கொண்டிருப்பதான சிலையை பார்த்ததில்லை.

அவரின் இருப்பே சிரிப்புதான்.

சிரிப்பின் உளவியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் சிரிப்புக்கும் புத்தனின் சிரிப்புக்கும் வேறுபாடு உண்டு.

உங்கள் வாழ்வு எந்த நேரத்திலும் ஏதாவது நிகழ்வுகளின் பாதிப்பால் அலைக்கழிக்கப்பட்டு துன்பம் நேரலாம் என்ற மனநிலையில் ஏதாவது ‘அபத்தமாக’ நடந்தால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி சிரித்துவிடுகிறீர்கள்.

அந்த அபத்தம் உங்களுக்கு தப்பிக்க உதவுகிறது துன்பத்தை மறக்க. டென்ஷன் மறைகிறது.

சிரிப்பு ஆரோக்கியமானது.

நிமிடத்தில் உடலை வேறு நிலைக்கு எடுத்து சென்றுவிடுகிறது.

ஆனால் அதுவும் நிமிடத்துக்குத்தான்.

பின் மறுபடி உன் இருட்டுக் குகைக்குள் போய்விடுகிறாய்.

உண்மைதான் உன் கனவு எதனால் ஆனதோ…..

அதனால் ஆனதே இந்த வாழ்வும்.

ஆனால் கனவை நீ ஒரு மாயை என்கிறாய்…

நனவை ‘மிகுந்த சிரமப்பட்டு’ தலையில் வைத்துக் கொண்டாடுகிறாய் .

கனவுக்கும் நீ நினைவு என்று சொல்வதற்கும் வித்தியாசமே இல்லை.

இந்த உலகில் வாழ்.

ஆனால் இந்த உலகம் உன்னுள் இருக்கக் கூடாது.

நினைவிருக்கட்டும்.

இது எல்லாமே அழகான கனவுதான்.

இந்த வாழ்வு என்பது மாறிக்கொண்டும் மறைந்துகொண்டும் தோன்றிக் கொண்டும் இருக்கிறது.

கனவும் அப்படித்தானே…….!!!

அதனால் இந்த நினைவுடன் ஒட்டிக் கொண்டிராதே

எப்படி தூங்கி எழுந்ததும் கனவுடன் ஒட்டிக் கொள்ளாமல் விடுபட்டுவிடுகிறாயோ அப்படி.

ஒட்டிக் கொண்டிருப்பது என்பது விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது.

அப்படி ஒட்டுதல் இல்லாமல் இருக்கையில் ‘அபரிமிதமான ஆற்றல்’ விடுபடுகிறது.

இவைகளுடன் ஒட்டிக் கொண்டுள்ளதால் சிறைபட்டுள்ள அந்த ஆற்றல்

ஒரு புதிய உதயத்தை,

புதிய இருப்பை,

புதிய ஒளியை,

புதிய புரிதலை உனக்குள் கொண்டுவரும்.

பிறகு துன்பம் என்பதே இல்லை.

இது நடக்கையில் நீ மிகவும் அமைதியான…..

இதுவரை அனுபவித்திராத அமைதியுடன் இருப்பாய்.

உன் இருப்பிலேயே சிரிப்பு வெடித்துக் கொண்டிருக்கும்.

அதைத்தான் போதிதர்மன் சொன்னான்.

“புத்தன் சிரிக்கிறான் ஆனால் சிரிக்காமலேயே”

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com