கல்வி சீரமைப்பு கட்டாயத் தேவை – நா.இராதாகிருஷ்ணன்

Advertisements

வரும் கல்வியாண்டில் இருந்து தமிழகத்தில் ப்ளஸ் ஒன் பாடத்திட்டத்திற்கும் பொதுத் தேர்வு என்பதை தமிழக கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன் அறிவிள்ளார்.

இனி ப்ளன் ஒன், ப்ளஸ் டூ ஆகிய இரு ஆண்டுகளும், மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆண்டு ஆண்டு காலமாக ப்ளஸ் ஒன் என்பது சும்மா என்ற நிலை போய், அதுவும் அம்மாடியோவ் என்ற நிலைக்கு வந்துள்ளது.

பல கல்வி நிலையங்கள் ப்ளஸ் ஒன் கல்வியாண்டில் ப்ளஸ் டூ பாடத்தை நடத்தி படிக்க வைத்ததின் விளைவு. நடைபெற்ற நீட் தேர்வில் கேள்விகள் ப்ளஸ் ஒன் பாடத்தில் இருந்து கேட்கப்பட்டு, அதை பதில் அளிக்க வழி தெரியாத நிலை ஏற்பட்டதின் விளைவாக, இப்போது ப்ளஸ் ஒன் படிப்புக்கு முக்கியத்துவம் கூடியுள்ளது.

கடும் போட்டி நிலைவும் கல்வி சூழல், இதில் அனவைரும் டாக்டர் ஆக வேண்டும், அனைவரும் இன்ஜினியர் ஆக வேண்டும் என்று நினைப்பது சமூகத்தில் ஏதோ ஒரு துறைக்கு முக்கியத்துவம் இருப்பது போல் காட்ட நினைப்பதின் விளைவு, அதற்கு உடன் வேலை வாய்ப்புகளும், சம்பள வகைகளும் அதிகம் கிடைப்பதால் மாணவர்கள் அறிவுத் திறன் ஒரு துறை சார்ந்து படிப்பதற்கே தங்களே தகுதிப்படுத்துவதற்கு நேரத்தை போக்குவதாக உள்ளது.

சமுகத்தில் எல்லா துறைகளும் தேவை என்பதையும், அதில் நிபுணத்துவம் இருந்தால் எந்த துறையிலும் சம்பாதிக்க முடியும் என்பதையும் உறுதிப்படுத்தும் வரையில் இந்த மடத்தனங்கள் இருக்கவே செய்யும். மாணவர்கள் ப்ராய்லர் கோழிகளாக வளர்க்கப்படுவதும் நடக்கவே செய்யும். இதில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று கல்வியாளர்களும், சமுக ஆர்வலர்களும், ஊடகங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தததின் விளைவு தற்போது தமிழக அரசு அதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இதில் முக்கிய பங்கு வகித்தது நீட் தேர்வு. அதில் சிபிஎஸ்சி பாடத்தில் கேள்விகள் கேட்கப்படுவதால் என்ன செய்தால் மாணவர்கள் திறன் பட அதை எதிர் நோக்க முடியும் என்று அரசு கலந்தாய்வு செய்து கொண்டுள்ளது.

மாணவர்களின் தற்போதைய கல்வி முறை மனப்பாட திறனை மையமாக வைத்து இருப்பதும், அதில் அதிக மதிப்பெண் பெற்றவர் அதிக திறமை சாலி என்று சொல்வதும் கேலி கூத்தாக்குவது போல், ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் ப்ளஸ் டூ தேர்வில் 700 மதிப்பெண்களே பெற்ற மாணவர் ஒருவர் எடை குறைவான சாட்டிலைட் ஒன்றை தயாரித்து, அது நாசா மூலமாக விண்ணில் ஏவுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.  திறமை மதிப்பெண்ணால் வருவதல்ல என்பதையும், மதிப்பெண் எடுத்தவனே திறமையானவன் என்பதும் அல்ல என்று நிருபித்துள்ளது,

ஆக கல்வி முறை மாணவனின் திறனை ஊக்குவித்து, அதை கூர்படுத்துவதாக இருப்பதை உண்மையான கல்வி முறையாக இருக்க வேண்டும் என்பதும். பொதுப்படையான ஆரம்ப கல்வியை பொதுவாக வைத்து, நடுநிலை கல்வி மற்றும் உயர்நிலை கல்வி  பாடத்திட்டத்தை மாணவன் திறன் சார்ந்து வளர்க்க வேண்டும் என்பதும், மாணவர்களை அவர்கள் திறன் சார்ந்து கண்டுபிடித்து அதன் வகையில் கல்வி கொடுப்பார்களே ஆனால் புதிய சிந்தனையாளர்களும், கண்டுபிடிப்பளார்களும், திறனாளர்களும் நடைமுறையில் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதுவே நவீன இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பாக அமையும்.

இதற்கு தமிழக அரசு மற்றும் மத்திய அரசுகள் எந்தவித நடவடிக்கைகளை எடுக்கப் போய்கின்றன, அது போர்கால நடவடிக்கையாக இருக்குமா மாணவர்கள் நிலை, தரம் உயருமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

You may also like...

Leave a Reply