மனக்கவலை மாற்றல் அரிது.

Advertisements

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. ”
தெளிவுரை:- தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையைப் போக்க முடியாது…
தனக்கு ஒப்பில்லாத கடவுள் என்பது இந்த உலகில் ஈடு இணையற்ற அளவற்ற அன்பைக் குறிக்கிறது…
இருதயம் அன்பால் நிறைந்து அன்பின் வழியில் வாழ்பவருக்கு மனக்கவலை என்பதே ஏற்படுவதில்லை…
அன்பைத் துறந்த மனிதர்களே மீளாத்துயரில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்…
தனக்கு ஒப்பில்லாத அன்பின் திருவடிகளைத் தவறாது நினைந்து இருதயத்தில் அந்த அன்பை குடியேற்றி வாழ்பவருக்கு மனக்கவலை எதுவும் ஏற்படாது. அந்த அன்பில்லா மற்றவருக்கு மனக்கவலை போக்க முடியாது என்பதே இக்குறள் போதித்த ஞானமாகி, அன்பே வாழ்வின் அருமருந்து என்று உணர்த்துகிறது…

You may also like...

Leave a Reply