வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

Advertisements

  • சர்வதேச நாடுகளின் கோரிக்கைகளை மீறி வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

வட கொரியா மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது.

இன்று (ஞாயிறு) மதியம் உள்ளூர் நேரப்படி ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் கூட்டுப்படைகளின் அலுவலகங்கள் கூறியுள்ளது.

வட கொரியா ஒருவாரத்திற்கு முன்னர் ஏவுகணை ஒன்றை பரிசோதித்த நிலையில் தற்போது மீண்டும் ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது.

முன்பு நடத்தப்பட்ட ஏவுகணை சோதனையை அடுத்து, இந்த ராக்கெட் பெரிய அணு ஆயுதம் ஒன்றை தாங்கிச்செல்லும் திறன் படைத்தது என்று வட கொரியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச நாடுகளின் கோரிக்கைகளை மீறி வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

கடந்த திங்களன்று, வட கொரியா இதுபோன்ற பரிசோதனை இனிமேல் நடத்தக்கூடாது என்று ஐ.நாவின் பாதுகாப்பு சபை கோரிக்கை விடுத்திருந்தது.

ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் மூலம் அணு ஆயுதங்களை அகற்றும் உண்மையான பொறுப்புகளை உடனடியாக வட கொரியா முன்னெடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை ஐ.நா பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

இந்த சமீபத்திய ஏவுகணை சுமார் 500 கி.மீ., (310 மைல்கள்) தூரத்திற்கு பறந்ததாக கூட்டுப்படைத் தளபதிகளை மேற்கோள் காட்டி தென் கொரிய செய்தி முகமையான யோன்ஹப் கூறியுள்ளது.

கடந்த வாரம் வட கொரியா நடத்திய சோதனையில் ஏவுகணை சமார் 700 கி.மீ., பறந்தது குறிப்பிடத்தக்கது.

 

You may also like...

Leave a Reply