சிவன் மட்டும் ஏன் லிங்கமாய் இருக்கிறான்

சிவலிங்கத்தின் அர்த்தம்….!!!லிங்கம் என்றால் “SYMBOL”, (or) “குறியீடு”என்று பொருள்!

சிவ-லிங்கம் என்றால் சிவ-குறியீடு! Siva-Symbol! சிவபெருமானைக் குறிக்கும் சின்னம்!
அம்புட்டு தான்!
படம் வரைந்து பாகங்களைக் “குறி” என்றுசொல்லும் போது நமக்கு ஒன்னும் அப்படித்
தோனுவதில்லையே! அப்புறம் ஏன் “லிங்கம்”என்று சொல்லும் போது மட்டும் இப்படி?
சிவ-லிங்கம் என்பது சிவ-குறியீடு! இதுக்குமேல சொல்லுறது எல்லாம்
வெள்ளைக்காரவுங்களின் அதீதக் கற்பனை!நாமளும் ஆங்கிலேய விளக்கத்தைக் கேட்டு
விட்டு, விம் பவுடர், சபீனா பவுடர் போட்டுஇன்னும் வெளக்கு வெளக்குன்னு
வெளக்கிட்டோம்!

சிவலிங்கம் பற்றிய ஒரு பொய்யை, ஓராயிரம்புத்தகமாப் போட்டு amazon.com -இல்
துரைமார்களோ இல்லை நம்மூர் high profileசாமியார்களோ வெளியிட்டுருவாங்க! அதைப்
படிச்சிட்டு, நமக்கே சந்தேகம் வரும் நிலைவந்துடிச்சிப் பார்த்தீங்களா?

அட ஆமாம்-ல! “அப்பிடித் தான்-ல” இருக்கு;நம்ம முன்னோர்கள் எல்லாரும் படா
கில்லாடியா இருந்திருக்காங்கப்பா-ன்னுகல்லூரி நண்பர்கள் கூட நமட்டுச் சிரிப்பு
சிரிச்சிக்கிட்டு Time Pass ஆகும்!

இத வச்சியேகல்லூரியில் கும்மி அடிக்கும் அதி தீவிரசிவபக்த குழாங்களும் உண்டு!
ஏன் அப்படி ஒரு லிங்க வடிவம்? அந்தவடிவத்தில் என்ன தான் சொல்ல வராங்க
என்பதைக் கொஞ்சம் எளிமையா, எல்லாருக்கும்புரியிறா மாதிரி சொல்லனும்னா
இறைவனைப் பரப்பிரம்மம் என்றுசொல்வதுண்டு! எதையும் கடந்து நிற்பவன்
பரம்=கடவுள்!
* ஹீரோ போல, முருகனும் கண்ணனும்
அழகாகச் சிரித்தால் = உருவம்!* உருவமே இல்லாத, குறியீடே இல்லாத, ஏதோ
ஒரு சக்தி நிலை = அருவம்!* உருவமும் உண்டு, அருவமும் உண்டு! (அ)
உருவமும் இல்லை, அருவமும் இல்லை =அப்பிடின்னா அதுக்குப் பேரு என்னா? =அருவுருவம்!
சிவலிங்கம் என்பது அருவுருவம்!

உருவமாகப் பார்த்தால் இறைவனும்மனுசனைப் போலத் தான்! கை கால் காது
மூக்கு-ன்னு எல்லாம் கடவுளுக்கும்இருக்கும் போல! காதுல பாட்டு கேப்பாரா?
மூக்குல மூச்சு விடுவாரா-ன்னுநெனச்சிக்குவோம்!

“உருவம்-னா வெறும் மனுச உருவம் மட்டும்தானா? மரம், செடி, விலங்கு, பறவை எல்லாம்
கூட உருவம் தான்! அந்த உருவத்துல எல்லாம்கடவுள் இருக்க மாட்டாரா?”-ன்னு சில பேரு
குறுக்குக் கேள்வி கேப்பாங்க!
ஹிஹி! அதான் தண்டகாரண்யத்து மரமாய்மீனமாய், ஆமையாய், வராகமாய், நரசிம்மமாய்,
வாமன-ராம-கண்ணன்னு மனுசன்களாய் பலஉருவத்தில் இறைவனைக் காட்டினாங்க!
சரி…உருவம் பற்றிச் சொன்னீங்க! இறைவன்அருவமாகவும் இருக்காருன்னு சொல்லிக்
கன்பூசன் பண்ணுறாங்களே!

உருவமே கெடையாதுன்னு சொல்லுறதநம்புறதா?
உருவமா இருக்குறத நம்புறதா? எதைப்பாநம்புறது?
* நீராவியா இருந்தா = அருவம்! கண்ணுக்குத்தெரியாது!
* பாத்திரத்துல புடிச்சி வச்சா = உருவம்!கண்ணுக்குத் தெரியும்!
எந்தப் பாத்திரத்துல தண்ணியைப்பிடிக்கறோமோ, அந்த உருவத்தையே
தண்ணியும் எடுத்துக்குது-ல்ல? அதேபோலத் தான் இறைவனும்!

இறைவன் உருவமாய் இருக்கலாம்! ஆனால்உருவம் மட்டுமே இறைவன் இல்லை!
இறைவன் அருவமாய் இருக்கலாம்! ஆனால்அருவம் மட்டுமே இறைவன் இல்லை!
இதை அவ்வப்போது நாம் உணர்ந்துகொள்ளணும்! அதுக்குத் தான் உருவமும்
இல்லாத, அருவமும் இல்லாத….அருவுருவம்
என்னும் ஒரு குறியீடு!வைணவ ஆலயங்களில் தீர்த்தம் என்பது ஒரு
அருவுருவம்!அதே போல் சைவ ஆலயங்களில் லிங்கம்
என்பது அருவுருவம்!லிங்க உருவத்தைச் சற்று நேரம் ஆழ்ந்து
பார்த்துக் கொண்டிருங்கள்! மனம் குவியும்!அதன் Geometry அப்படி!

எப்படி மேலைநாடுகளில் Crystal Gazing-இல்மனத்தை ஒருமைப் படுத்துகிறார்களோ, அதே
போல் வழிபாடு/ தியான முறைகளுக்குப்பயன்படுத்துவதற்கு சிவலிங்க உருவம் நம்
பண்பாட்டில் அமையப் பெற்றது!சிவபெருமான், யோகி மற்றும் குரு
வடிவானவர்! எனவே அவரைக் குறிக்கும்லிங்கமும் யோகம் மற்றும் தியான வடிவமாக
இருக்கு!லிங்கம்=லிங்+கம் லிங்=லியதே=எல்லாப் பொருளும் அங்கு
லயிப்பது, ஒன்றுபடுவது! (merge)*கம்=கமயதே=எல்லாப் பொருளும்
அங்கிருந்தே எழுவது! (emerge)இப்படி merge-emerge, ஒடுங்கி-எழுவது தான்
சிவலிங்க சொரூபம்!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *