16- ம் பெற்று பெருவாழ்வு வாழ்க!!!

Advertisements

1) பெற்றோர்களைநோகடிக்காதே…நாளை உன் பிள்ளையும்உனக்கு அதை தான் செய்யும்…!!
2) பணம் பணம் என்றுஅதன் பின்னால்செல்லாதே…வாழ்க்கை போய்விடும்…
வாழ்க்கையையும்ரசித்துக் கொண்டேபோ…!!
3) நேர்மையாக இருந்துஎன்ன சாதித்தோம்என்று நினைக்காதே…நேர்மையாக இருப்பதே
ஒரு சாதனை தான்…!!
4) நேர்மையாகஇருப்பவர்களுக்குசோதனை வருவதுதெரிந்ததே, அதற்காக
நேர்மையை கை விட்டுவிடாதே…அந்த நேர்மையே உன்னை காப்பாற்றும். ..!!
5) வாழ்வில் சின்ன சின்னவிஷயத்திற்கெல்லாம் கோபப்படாதே… சந்தோஷம்
குறைவதற்கும்,பிரிவினைக்கும் இதுவே முதல் காரணம்…!!
6) உன் அம்மாவிற்காகஒரு போதும் மனைவியை விட்டு கொடுக்காதே…
அவள் உனக்காகஅப்பா அம்மாவையே விட்டு வந்தவள்…!!
7) உனக்கு உண்மையாகஇருப்பவர்களிடம்…நீயும் உண்மையாய் இரு…!!
8) அடுத்தவர்களுக்கு தீங்குசெய்யும் போதுஇனிமையாகத்தான் இருக்கும்…
அதுவே உனக்கு வரும் போது தான், அதன்வலியும் வேதனையும்புரியும்…!!
9) உன் மனைவிஉண்மையாக இருக்க வேண்டும் என்று, நீ நினைப்பது போல்…
நீயும் உண் மனைவிக்குஉண்மையாய் இரு,எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காதே,
அதுவே உன் மனைவிக்கு கொடுக்கும் மிகப்பெரிய பரிசு…!!
10)ஒருவன் துரோகிஎன்று தெரிந்துவிட்டால்…அவனை விட்டு விலகியே இரு…!!
11)எல்லோரிடமும்நட்பாய் இரு…நமக்கும் நாலு பேர் தேவை…!!
12)நீ கோவிலுக்கு சென்று தான் புண்ணியத்தை சேர்க்க வேண்டும் என்பதில்லை…
யாருக்கும் தீங்குசெய்யாமல் இருந்தாலே… நீ கோவில் சென்றதற்கு சமம்…!!
13)நிறை குறை இரண்டும்கலந்தது தான் வாழ்க்கை… அதில் நிறையை மட்டும் நினை…
நீ வாழ்க்கையைவென்று விடலாம்…!!14)எவன் உனக்கு உதவி செய்கிறானோ,
அவனுக்கு மட்டும் ஒரு நாளும் துரோகம் செய்யாதே… அந்த பாவத்தை நீ
எங்கு போனாலும் கழுவ முடியாது…!!
15)அடுத்தவர்களைப்போல் வசதியாகவாழ முடியவில்லை என்று நினைக்காதே…
நம்மை விட வசதியற்றவர்கள் கோடி பேர் இருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்…!!
16)பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில்,நீ செய்யும் பாவம் புண்ணியம் மட்டுமே
உனக்கு மிஞ்சும்… உன்னுடன் கடைசி வரை வருவதும் இதுவே…!!

வாழ்க வளமுடன்…!!!!

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com