கல்லூரியில் இருந்து வெளியேற்றிய ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டத்தை பெற்றுள்ளார்.ஜூக்கர்பெர்க்

Advertisements

கேம்பிரிட்ஜ்: பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களுக்கு சொந்தக்காரரான மார்க் ஜூக்கர்பெர்க் தன்னை கல்லூரியில் இருந்து வெளியேற்றிய ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டத்தை பெற்றுள்ளார்.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் 366-வது பட்டமளிப்பு விழாவில், இந்தக் கௌரவ டாக்டர் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. உலகின் 5-வது பணக்காரரான பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், 2004-ம் ஆண்டு பேஸ்புக் ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்ததால் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

ஆனால் சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு அதே பல்கலைக்கழகம், சட்டத்துறைக்கான கௌரவ டாக்டர் பட்டத்தை அவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது. அப்போது, மாணவர்களிடம் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட ஜூக்கர்பெர்க், தான் பேஸ்புக்கிற்காக திட்டமிடப்பட்ட கம்ப்யூட்டர் குறித்த படங்களைக் காட்டினார்.

மேலும் மலரும் நினைவுகளாக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அவர் தங்கியிருந்த அறைகளுக்குச் சென்றும் பார்வையிட்டார். பல்கலைக்கழகத்தை பார்த்த ஜூக்கப்பெர்க், அங்கு புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார். நிகழ்வுகள் அனைத்தையும், அவர் தனது பேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

You may also like...

Leave a Reply