[:en]இராம்நாத் கோவிந்த் …. பாஜக அதிகார சேர்க்கை – ஆர்.கே.[:]

Advertisements

[:en]

பாரத தேசத்திற்கான மற்றொருமொரு தேர்தல் திருவிழா நாட்குறிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் களைகட்டத் தொடங்கி விட்டன.

இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு இன்று இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவும், எதிர்கட்சியான காங்கிரசும் தங்கள் அணிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

இராம்நாத் கோவிந்த் பாஜகவால் தேர்வான குடியரசுத் தலைவர் வேட்பாளர். மீரா குமார் காங்கிரசால் தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர். இதில் ஏகோபித்த ஆதரவுடன் ஒரு பொது வேட்பாளரை தேர்வு செய்யும் முயற்சியை இரு பெரும் கட்சிகளும் முயற்சித்து தோல்வியை தழுவியதின் அடிப்படையில் வேட்பாளர்கள் அறிவிக்ப்பட்டு குடியரசுத் தலைவர் தேர்த்ல் வரும் ஜூலை 17 அன்று நடைபெறப்போகிறது.

இதில் கிட்டத்தட்ட பாஜக வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுவிடுவார் என்பது அதற்கு ஆதரவு தரும் கட்சிகளின் ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் சொல்லப்பட்டாலும், வாக்குப்பதிவில் கட்சி கொறடா உத்தரவு படி செல்லாது என்பதும், இரகசிய வாக்குப்பதிவு என்பதும் இறுதியாக முடிவு அறிவிக்கப்படும் பொழுதே நிச்சியமாக தெரியும்.

ஏதோ எப்படியோ அறிவிக்கப்பட்டுள்ள பா.ஜ.க. வேட்பாளர் இராம்நாத் கோவிந்துக்கு அதிக ஆதரவும், அவரே வெற்றி வேட்பாளராகவும் தற்சமயம் உள்ளார். இவர் உத்தரபிரதேசம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள தேகத் என்ற இடத்தில் பிறந்து, தனது பட்டப்படிப்பை கான்பூர் யுனிவர்சிட்டியில் வணிகம் மற்றும் எல்எல்பி படிப்பை முடித்தவர். இவர் தந்தை ஒரு விவசாயி. தாழ்த்தப்பட்ட பட்டியல் வகுப்பைச் சார்ந்தவர். வழக்கறிஞராக உச்சநீதிமன்றத்தில் பணிபுரிந்தவர். முன்னாள் இராஸ்ட்ரிய ஸ்வயம் சேவக் உறுப்பினர். ஆதாவது ஆர்எஸ்எஸ் பின்னணியுடையவர். பாஜகவின் தலித் மோர்ச்சா அமைப்பின் தலைவராக 1998 முதல் 2002 வரை பணி செய்தவர். இராஜ்யசபா உறுப்பினராக 2  முறை தேர்வு செய்யப்பட்டவர்.  முன்னாள் பீகார் மாநில கவர்னர். தற்போதைய பீகார் மாநில முதல்வர் நீதிஷ் குமார் இவரின் தேர்வை வரவேற்றுயுள்ளார். பீகாரில் இவரின் பணிகளை பாராட்டியுள்ளார்.

எது எப்படியோ நாட்டின் உயர் பதவிக்கு பாஜகவின் ஆர்எஸ்எஸ் பின்ணணியுடைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்ட்டது சர்ச்யைக் கிளப்பியிருந்தாலும், இப்படித்தான் நடக்கப் போகிறது என்ற முன்பே பேச்சு கிளம்பியது. அதன்படியே நடந்துள்ளது.

நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கும், பன்முகத் தன்மை கொண்ட சமூக அமைப்பில் வாழும் மக்களுக்கான அரசியல் அமைப்பு தந்துள்ள உரிமைகளை காக்கும் மிகப்பெரிய பொறுப்பு வரப்போகும் குடியரசுத் தலைவருக்கு உண்டு. நாட்டை ஆளும் பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் முட்டல், மோதல் ஏற்படுமா அல்லது இவரும் அரசின் ஒரு இரப்பர் ஸ்டாம்ப்  குடியரசுத் தலைவரா என்பது வரும் காலங்களில் தெரியும்.

நாட்டின் இரு உயர் பொறுப்புளிலும் பாஜக இடம் பெறும் வாய்ப்பு, இராம்நாத் கோவிந்த் வெற்றி பெரும் பட்சத்தில் அமையும். அது நாட்டிற்கு எந்த வகையில் பலம் சேர்க்கப் போகிறது என்பது காலப்போக்கில் தெரியும் என்றாலும், பாஜகவின் அதிகார சேர்க்கையில் மற்றொரு ஒரு புது வரவாகத்தான் அறியப்படும்.

இது பாஜகவிற்று புதுத் தெம்பையும், தைரியத்தையும் ஏற்படுத்தித் தரும், இதன் மூலமாக அதிரடி அரசியலா? வளர்ச்சிக்கான அரசியலா? இல்லை கட்சி வளர்ப்பு அரசியலா எதற்கு குடியரசுத் தலைவர் துணை பயன் படப்போகிறது என்பது கேள்வியாக உள்ளது. பாஜக தனது ஆதரவு பெற்ற குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்படும்பட்சத்தில் அவர் மூலம் இந்திய அரசியலமைப்பு திருத்தத்தை பலவற்றை செய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது. நீதித் துறை சீர்திருத்தம், தேர்தல் சீர்திருத்தம் என்று சீர்திருத்த நடவடிக்கைகள் ஜரூராக நடக்க வாய்ப்புகள் அதிகம் தெரிகிறது. பாஜக இன்று அரசியலில் கால் ஊன்றி உள்ள கிரிமினல்களை களை எடுத்து, பணநாயகமற்ற தேர்தல் நடைமுறைகளை கொண்டு வருவதும், அனைவருக்குமான நீதி விரைவில் கிடைக்க செய்யும் ஏற்பாட்டடையும், சமூக பொருளாதார சமத்துவ நிலையை ஏற்பட செய்யுமானால் 2019 பிரகாசமான மற்றொருமொரு தேர்வுக்கு பாஜக தயார் ஆகலாம்.

[:de]இராம்நாத் கோவிந்த் …. பாஜக அதிகார சேர்க்கை – ஆர்.கே.
பாரத தேசத்திற்கான மற்றொருமொரு தேர்தல் திருவிழா நாட்குறிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் களைகட்டத் தொடங்கி விட்டன.
இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டு இன்று இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவும், எதிர்கட்சியான காங்கிரசும் தங்கள் அணிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

இராம்நாத் கோவிந்த் பாஜகவால் தேர்வான குடியரசுத் தலைவர் வேட்பாளர். மீரா குமாரி காங்கிரசால் தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர். இதில் ஏகோபித்த ஆதரவுடன் ஒரு பொது வேட்பாளரை தேர்வு செய்யும் முயற்சியை இரு பெரும் கட்சிகளும் முயற்சித்து தோல்வியை தழுவியதின் அடிப்படையில் வேட்பாளர்கள் அறிவிக்ப்பட்டு குடியரசுத் தலைவர் தேர்த்ல் வரும் ஜூலை 17 அன்று நடைபெறப்போகிறது.

இதில் கிட்டத்தட்ட பாஜக வேட்பாளர் தேர்வு செய்யபட்டுவிடுவார் என்பது அதற்கு ஆதரவு தரும் கட்சிகளின் ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில் சொல்லப்பட்டாலும், வாக்குப்பதில் கட்சி கொறடா உத்தரவு படி செல்லாது என்பதும், இரகசிய வாக்குப்பதிவு என்பதும் இறுதியாக முடிவு அறிவிக்கப்படும் பொழுதே நிச்சியமாக தெரியும்.
ஏதோ எப்படியோ அறிவிக்கப்பட்டுள்ள பா.ஜ.க. வேட்பாளர் இராம்நாத் கோவிந்துக்கு அதிக ஆதரவும், அவரே வெற்றி வேட்பாளராகவும் தற்சமயம் உள்ளார். இவர் உத்தரபிரதேசம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள தேகத் என்ற இடத்தில் பிறந்து, தனது பட்டப்படிப்பை கான்பூர் யுனிவர்சிட்டியில் வணிகம் மற்றும் எல்எல்பி படிப்பை முடித்தவர். இவர் தந்தை ஒரு விவசாயி. தாழ்த்தப்பட்ட பட்டியல் வகுப்பைச் சார்ந்தவர். வழக்கறிஞராக உச்சநீதிமன்றத்தில் பணிபுரிந்தவர். முன்னாள் இராஸ்ட்ரிய ஸ்வயம் சேவக் உறுப்பினர். ஆதாவது ஆர்எஸ்எஸ் பின்னணியுடையவர். பாஜகவின் தலித் மோர்ச்சா அமைப்பின் தலைவராக 1998 முதல் 2002 வரை பணி செய்தவர்.
எது எப்படியோ நாட்டின் உயர் பதவிக்கு பாஜகவின் ஆர்எஸ்எஸ் பின்ணணியுடைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்ட்டது சர்ச்யைக் கிளப்பியிருந்தாலும், இப்படித்தான் நடக்கப் போகிறது என்ற முன்பே பேச்சு கிளம்பியது. அதன்படியே நடந்துள்ளது.

நாட்டின் மதச்சார்பற்ற கொள்கைக்கும், பன்முகத் தன்மை கொண்ட சமூக அமைப்பில் வாழும் மக்களுக்கான அரசியல் அமைப்பு தந்துள்ள உரிமைகளை காக்கும் மிகப்பெரிய பொறுப்பு வரப்போகும் குடியரசுத் தலைவருக்கு உண்டு. நாட்டை ஆளும் பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் முட்டல், மோதல் ஏற்படுமா அல்லது இவரும் அரசின் ஒரு இரப்பர் ஸ்டாம் குடியரசுத் தலைவரா என்பது வரும் காலங்களில் தெரியும்.
நாட்டின் இரு உயர் பொறுப்புளிலும் பாஜக இடம் பெறும் வாய்ப்பு இராம்நாத் கோவிந்த் வெற்றி பெரும் பட்சத்தில் அமையும். அது நாட்டிற்கு எந்த வகையில் பலம் சேர்க்கப் போகிறது என்பது காலப்போக்கில் தெரியும் என்றாலும், பாஜகவின் அதிகார சேர்க்கையில் மற்றொரு ஒரு புது வரவாகத்தான் அறியப்படும்.
இது பாஜகவிற்று புதுத் தெம்பையும், தைரியத்தையும் ஏற்படுத்தித் தரும், இதன் மூலமாக அதிரடி அரசியலா? வளர்ச்சிக்கான அரசியலா? இல்லை கட்சி வளர்ப்பு அரசியலா எதற்கு குடியரசுத் தலைவர் துணை பயன் படப்போகிறது என்பது கேள்வியாக உள்ளது. பாஜக தனது ஆதரவு பெற்ற குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்படும்பட்சத்தில் அவர் மூலம் இந்திய அரசியலமைப்பு திருத்தத்தை பலவற்றை செய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளது. நீதித் துறை சீர்திருத்தம், தேர்தல் சீர்திருத்தம் என்று சீர்திருத்த நடவடிக்கை ஜரூராக நடக்க வாய்ப்பு அதிகம் தெரிகிறது. பாஜக இன்று அரசியலில் கால் ஊன்றி உள்ள கிரிமினல்களை களை எடுத்து, பணநாயகமற்ற தேர்தல் நடைமுறைகளை கொண்டு வருவதும், அனைவருக்குமான நீதி விரைவில் கிடைக்க செய்யும் ஏற்பாட்டடையும், சமூக பொருளாதார சமத்துவ நிலையை ஏற்பட செய்யுமானால் 2019 பிரகாசமான மற்றொருமொரு தேர்வுக்கு பாஜக தயார் ஆகலாம்.

[:]

You may also like...

Leave a Reply