[:en]எதை செய்கிறாயோ அதுவாகவே மாறுவதே ஜென்[:]

Advertisements

[:en]ஜென் குருக்களில் தலைசிறந்தவர் நானின், அவரின் பெருமையை கேள்விப்பட்டு  பல்கலை கழக பேராசிரியர் ஒருவர் அவரை கான  வந்தார்.

பேராசிரியர் வெகுநேரம் காத்திருந்தும் நானின் வராததால், தானே நேரில் சென்றுசந்திக்க முடிவுசெய்து கிளம்பினார்.

காட்டில் எங்கு தேடியும் நானின் கிடைக்கவில்லை.

இருதியாக ஒரு வயதான மரவெட்டி கண்ணுக்கு தென்படவே,

அவரிடம் நானின் பற்றி விசாரித்தார் பேராசிரியர்.

மரவெட்டி,மரத்தை வெட்டியபடியே ”கோடாரி மழுங்கிவிட்டது” என்றான்.

காது சரியாக கேட்கவில்லையோ என்று பேராசிரியர் நானின் பெருமையை பற்றி

சத்தமாக சொல்லி விசாரிக்க,

மரவெட்டி கோடாரியை சனைபிடித்தவாறே கண்டுகொள்ளாமல் இருக்க,

பேராசிரியர் கோவமாகி நீ என்ன பைத்தியமா? என்று கத்த,

மரவெட்டி கோடாரியை தூக்கி முனை கூராகிவிட்டது உன் தலையை

பிளக்கவா? என்று கத்த  பேராசிரியர் தலை தெறிக்க காட்டைவிட்டு ஓடிவருகிறார்.

அப்போது வழியில் இரு ஜென் துறவிகள் அவரை வழி மறித்து விசாரிக்க,

பேராசிரியர் பைத்தியத்தை பற்றி சொல்ல,

இருவரும் சடாரென்று இவர்காலிள் விழுந்து , நீங்கள் பார்த்தவர்தான் நானின்

அவரின் போதனை உமக்கு விலங்கவில்லையா? என்று துறவிகள் கேட்க,

பேராசிரியர் புரியாமல் விழிக்க,

துறவி விளக்கம் கூறினர்.

நீங்கள் முதலில் அவரை மரவெட்டியாகத்தான் பார்த்திருக்கிறீர்கள்

அவரும் மரவெட்டியாகவே முழுகவனமும் கோடாரிமீதே இருந்துள்ளது,

மரத்தை சரியாகவெட்டாதபோது அவர் சானை பிடித்துள்ளார்.அது கூர்மை

ஆனபோது, அவரை நீங்கள் பைத்தியமாக பார்துள்ளீர்கள்,அதனால்

கோடாரியை கூர்பார்க்க உங்கள் தலையை கேட்டுள்ளார். குரு

ஜென் என்பது தத்துவ விசாரணை அல்ல, எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு, செய்யும்

தொழிலாகவே மாறிவிடுவது தான் ஜென்.

அதாவது நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதை மிகுந்த பிரக்ஞை

உணர்வுடன் செய்வ்தே ஜென்

 

 [:]

You may also like...

Leave a Reply