[:en]தியானம் சுலபமாக வரும்[:]

Advertisements

[:en]”உடலோடும் மனதோடும்
நட்புணர்வை உருவாக்குங்கள்.அப்போது தியானம் சுலபமாக வரும்.”

★நீங்கள் கொஞ்சநேரம் அமைதியாக
உட்கார முயற்சி செய்தால் இதை நீங்கள்
புரிந்து கொள்ள
முடியும்.கற்பனை விஷயங்கள் நிகழ
ஆரம்பிக்கும்.
உங்கள் காலில்
எறும்பு ஊர்ந்து செல்வது போன்று
நினைப்பீர்கள்.ஆனால்,நீங்கள் பார்த்தால்
எறும்பு இருக்காது.இது வினோதமானது

★நீங்கள்
கண்களை மூடிக்கொண்டு இருந்தபோது அது அங்கே ஊர்ந்து கொண்டும்,
நகர்ந்து கொண்டும் இருந்தது.ஆனால்
நீங்கள் கண்களை திறந்து பார்த்த
போது,அங்கே எறும்பு இருக்காது
.எதுவும் இருக்காது.
அப்போது உங்கள் உடல்
வெறுமனே தந்திரம் செய்கிறது.
நீங்கள் உடலோடு அநேக
தந்திரங்களை செய்தீர்கள்.நீங்கள் அநேக
வழிகளில் இந்த
உடலை ஏமாற்றினீர்கள்.எனவே இப்போது
இந்த உடல் உங்களை ஏமாற்றுகிறது.
உங்களது உடல் தூங்கப்போக வேண்டும்
என்று விரும்பும்போது நீங்கள்
அதை கட்டுப்படுத்தி ஒரு திரைப்பட
அரங்கில் உட்கார
வைக்கிறீர்கள்.எனவே உங்களது உடல்

★”சரி.எனக்கு சந்தர்ப்பம்
கிடைக்கும்போது,நான் பார்த்துக்
கொள்கிறேன்.”என்கிறது.
ஆகவே நீங்கள் தியானத்தில்
உட்காரும்போது உங்களது உடல்
பிரச்சினைகளை உருவாக்க
ஆரம்பிக்கிறது.
திடீரென்று உங்களது முதுகைச்
சொறிய வேண்டும் போல்
தோன்றும்.ஆனால் இவை எல்லாம்
சாதாரணமாக ஒருபோதும்
நடப்பதில்லை என்பதை அறிந்து ஆச்சரிய
ப்படுவீர்கள்.

★”வெறுமனே உடலின்
மீது அக்கறை செலுத்துங்கள்.அப்போது உடல் அளவுக்கு அதிகமாக
திருப்பிக் கொடுக்கும்.”
“உங்களது மனதின்
மீது அக்கறை கொள்ளுங்கள்.அப்போது
மனம் உதவிகரமாக இருக்கும்.”

★”உடலோடும் மனதோடும்
நட்புணர்வை உருவாக்குங்கள்.அப்போது
தியானம் சுலபமாக வரும்.”
இதை நான் எனது சொந்த அனுபவத்தில்
இருந்து கூறுகிறேன்.உடலுக்கு மரி
யாதை செலுத்துங்கள்.மனதிற்கு
மரியாதை கொடுங்கள்.அப்போது
அவைகள் உங்களை மதிக்கும்.

– ஓஷோ

[:]

You may also like...

Leave a Reply