[:en] இதுதான்   என் போதனை[:]

Advertisements

[:en] 

ஆசிரியர் மாணவர்களை பார்த்து, “ஜென் பயிற்ச்சிவகுப்பின் இறுதி நாள் நாளை. உங்களுக்குமுழுவதுக ஜென் தத்துவம் போதிக்கபட்டு விட்டது. நாளை முதல் நீக்கள் முழுமையான ஜென் மனிதனாக வாழப்போகிறீர்கள். நாளை ஜென் குரு உங்களின் சந்தேகத்திர்க்கு விடை அளிப்பார், இன்று இரவு கேளிக்கை விருந்தில் கலந்துகொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு சென்றார்.

விருந்து ஆரம்பம் ஆனது, விஸ்கி,ஒய்ன் பறிமாறப்பட்டது. அந்த இரவு விடுதியில்  ஒருவர் அதிகமாக குடித்துவிட்டு எனோடு போட்டிப்போட முடியுமா? என்று கூட்டத்தை பார்த்து சவால் விட்டார்.

பலரும் போட்டிப்போட்டு தோற்றனர். போதை அதிகமாகி எல்லோரும் மயங்கி விழுதனர்.அந்த ஆள் மட்டும் இன்னும் குடித்துக்கொண்டிருந்தான்.

மறுநாள் காலை

எல்லோரும் இறுதி தியானவகுப்பிற்கு வரும்போது,அந்த குடிகாரர் முதல் ஆளாக அமர்ந்து தியானபயிற்சியில் இருந்தார்.

மேலும் காலை உணவு  மேஜையில் புன்முகத்துடன் அணைவரையும் வரவேற்றார்.

முதலில் சாப்பிட்டுவிட்டு வெளிவராண்டாவில் களைந்து இருந்த காலணிகளை ஒழுங்காக அடுக்கிவைத்தார்.

ஒவ்வொருவரின் அணுபவத்தை மேடையில் வந்து சொன்னபோது, அவர் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார்.

இருதியாக மேடையேரியவர் ” இதுதான்   என் போதனை ”என்று சொல்லிவிட்டு  கிளம்பினார்.

 [:]

You may also like...

Leave a Reply