[:en]சுட்டி காட்டியவர்[:]

Advertisements

[:en]ஜென் ஆசிரியரின் நாய் அவரை மிகவும் நேசித்தது. அவர் சொல்வதை எல்லாம் செய்தது. அதுவும் ஒரு மாணவனாகவே இருந்து வந்தது .

ஜென் ஆசிரியர் மாணவன் ஒருவன் மிகுந்த குழப்பத்தில் இருப்பதை உணர்ந்தார்.

அந்த மாணவனை அழைத்து, ”ஜென்னின் வர்த்தைகள் வெறும் வழிகாட்டுதல் மட்டுமே

அதுவே வாழ்க்கையாகிவிடாது. அவைகள் சத்தியத்தின் சாயல்களே தவிர

அதுவே சத்தியம் ஆகிவிடாது, அதை நீதான் வாழ்ந்தாகவேண்டும். இதை

நீ  புரிந்து கொள்ள வேண்டும்,” என்று  கூறி,மகிழ்ச்சியாக விளையடிக்கொண்டிருந்த நாயை அழைத்தார்

வானத்தை நோக்கி கைகாட்டி

“சந்திரனை என்னிடம் கொண்டு வாருங்கள்” என்று அவர் தனது நாய்க்கு சொன்னார்.

மாணவன் ஆசிரியரின் செய்கையை வினோதமாக பார்த்தான்,

ஆசிரியர் மாணவனை பார்த்து

“என் நாய் எங்கு பார்க்கிறது?” என்று  கேட்டார்.

நாய் ஆசிரியரின் கைகளையே பார்த்துக்கொண்டிருந்தது.

மாணவன்” உங்கள் கைகளை”என்றான்

“மிகச்சரித்தான்.

சுட்டிகாட்டிய விஷயத்தை விட்டுவிட்டு,

சுட்டி காட்டியவர்களையே வேடிக்கை பார்ப்பதால்

வந்த விளைவே மனித குலத்தின் குழப்பங்களுக்கு

காரணம்” என்றார் ஆசிரியர்.

மாணவன் முகம் பிரகாசமானது.[:]

You may also like...

Leave a Reply