[:en]சீரழியும் இந்திய ஜனநாயகம் –  ஆர்.கே.[:]

Advertisements

[:en]

ஐந்தாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இந்திய அரசியலமைப்பில் அரசர்கள் ஆண்ட போதே ஜனநாயக குடி அரசுகளும் இருந்துள்ளதை வரலாறு தெரிவிக்கிறது. உலகத்திற்கு ஜனநாயகத்தை அறிமுகப்படுத்தியவர்கள்  கிரேக்கர்கள் என்பார்கள். முடி ஆட்சி இருந்த காலத்திலேயே மக்களின் எண்ணங்களுக்கு மற்றும் சமூகம் மதிக்கும் அறிஞர்கள் கருத்துக்கு ஏற்ப மன்னர்கள் ஆட்சி செய்து வந்தார்கள். தமிழகத்தில் கூட குடவோலை முறை ஆட்சி இருந்துள்ளது. நமது பஞ்சாயத்து நடைமுறை மிகப் பழமையானது. மன்னர்கள் ஆட்சி செய்த காலத்திலேயே மக்களாட்சி இருந்தற்கு இதெல்லாம் சாட்சிகள் தான்.

ஜனநாயக மாண்பு, இறையாண்மை, மக்களாட்சித் தத்துவம் என்பவை எல்லாம் உலகில் மிக உயர்வாக மதிக்கப்படுபவை. காரணம் எந்த ஒரு முடிவையும் ஒன்று கூடி ஏகோபித்த மன உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதன்படி நடப்பதே ஆகும். மன்னர்களின் ஆட்சியில் அவர்கள் வைத்ததே சட்டம், சாசனம். அதை மீறி தும்பு துக்கடாவை கூட யாரும் அசைத்துவிட முடியாது. சுதந்திர காற்று ஒற்றை  வழிபாதையாக இருந்தது.

ஜனநாயக மலர்ச்சி காக்கப்பட வேண்டும் என்று உலக முழுவதும் பேசப்படுவதற்கு காரணம். அடிமை சாசனம் எழு தி கொடுத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான். ஆனால் சமீபத்திய நடைமுறைகள் அதை காவு கொடுத்துவிடும் போல இருக்கின்றது.  மக்களால் தேர்தெடுக்கப்படும் எம்ஏல்ஏக்கள். எம்பிக்கள்  அரசியல் லாபம் கருதி விலை பேசப்படுகின்றனர்.

ஆட்சியை காக்கவோ, அல்லது கவிழ்க்கவோ அவர்கள் பகடை காயக பயன்படுத்தப்படுவது, ஓட்டளித்த மக்களை பார்த்து அரசியல் கட்சிகள் பல்ளிளிப்பது போல் உள்ளது. ஜனநாயக மாண்பு, அதன் மாட்சிமை, இறையாண்மை எல்லாம் அரசியல் கட்சிகளின்  அழிச்சாட்டியங்களால் அசிங்கப்பட்டு நிற்கிறது.

சமீபத்திய கூவாத்துர் ரிசாட் எம்எல்ஏக்கள் அடைத்து வைப்பு மற்றும் பெங்களூரு  குஜராத் எம்எல்ஏக்கள்  ரிசாட் அடைப்பு என்பதெல்லாம் தொடர்ந்து ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்கள் தாம்.

குஜராத் வெள்ளக் காடகி நிற்கும் போது, அங்கு தங்கள் ஜனநாயக  கடமையை ஆற்ற வேண்டிய எம்ஏல்ஏக்கள் கைதானது போல பெங்களூரு ரிசாட்டில் அடைபட்டு கிடக்கிறார்கள். காரணம் குஜராத் இராஜ்சபா உறுப்பினரை தேர்தெடுக்கப்பட நடக்கும் பேரத்தில் ஒரு எம்ஏல்ஏக்கு 15 கோடி பேரம் பேசப்படுவதாக கூறப்பட்டு, எங்கே வாங்கி விடுவார்களோ என்று அச்சப்பட்டு காங்கிரஸ் கட்சி அவர்கள் எம்எல்ஏக்களை  பெங்களூரு ரிசாட்டில் அடைத்து வைத்துள்ளது.

இங்கோ  தமிழகத்தில் கூவத்துர் எபிசோட் முடிந்து, ஆட்சி யாருக்கு?, கட்சி யாருக்கு? என்ற பேரம் நடந்து வருகிறது. அதற்கு பல கோடிகள் பேசப்படுவதாக சம்பந்தப்பட் ஆளும் கட்சியின் எம்எல்ஏவே சாட்சியம்  கூறுகிறார்.

இது புதிய விஷயம் அல்ல பலமுறை இவ்வாறு நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பாக பாஜக அருணாச்சலபிரதேசத்தில் நடந்து கொண்ட முறை சொல்லப்படுகிறது.

இப்படியாக ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகள் எதிரும், புதிருமாக மக்கள் அளித்த தீர்ப்பை கலங்கப்படுத்தி அரசியல் லாபம் அடைய நினைப்பது ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் விஷயம்தான். இப்படியாக போனால் இந்தியாவில் ஜனநாயக ஆட்சி நடக்கிறது என்று சொன்னால் அறிவுள்ள எவனும் நம்ப மறுப்பான் என்ற நிலைபோய் அப்பாவி பாமரனும் நம்ப மாட்டான் என்ற நிலை வந்துவிட்டது.

இதை சீரமைக்கப்படாவிட்டால் பெரும் இன்னலை நாடு சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படும். பிறகு அதை மீட்க முடியாத நிலைக்கு  நாம் சென்று விடுவோம். பிறகு ஜனநாயகம் என்றால் யாரும் நம்ப மறுப்பார்கள். மக்களே, ஆட்சியார்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

 

 [:]

You may also like...

Leave a Reply