[:en]அதிமுக பவர் பாலிட்டிக்ஸ் வெல்லப்போவது யார்? —- ஆர்.கே.[:]

Advertisements

[:en]

பூனைக்குட்டி வெளிய வந்திருச்சு என்பது போல அதிமுக பவர் பாலிட்டிக்ஸ் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது. அது பூனைக்குட்டியா, புலிக்குட்டியா யார் அது? என்பதுதான் இப்போது உள்ள கேள்வி.

கடந்த நான்கு மாத காலமாக இருந்த  எடப்பாடி விஸஸ் தினகரன் கோஷ்டிகளிடம் இருந்த மௌன புரட்சி வெளி அரங்கமாகி வீதிக்கு வந்துவிட்டது. நாங்கள் தான் ஆட்சியும், கட்சியும் என்று இரண்டு பிரிவுகளும் கூறிக் கொண்டு ஒருவர் மீது மற்றொருவர் சேற்றை அள்ளி  வீசிக் கொண்டு இருந்தார்கள்.

தமிழக மக்களின் பிரச்னைகள் முக்கியமாகாமல் இவர்கள் அடிதடிதான் தலைப்பு செய்திகளாக வந்தன.  இதுவரை நாங்கள் எல்லாம் ஒன்றுதான்  ஆட்சி எடப்பாடி, கட்சி நாங்கள் என்று சொல்லி வந்த தினகரன் வெளியிட்ட நிர்வாகிகள் பட்டியல் செல்லத்தக்கது  அல்ல ஏற்கதக்க அல்ல என்று எடப்பாடி அணி கூக்குரல் ஈட்டது. அத்தோடு நிற்காமல் தினகரன் வெளியிட்ட பட்டியல் செல்லாது என்றும் தினகரன் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் இல்லை என்றும்  தீர்மானம் போட்டது.

அப்போது தான் தினகரன் முதல்வரை கடுமையாக 420 என்று விமர்சித்தார். 420 என்றால் மோசடி பேர்வழி என்று சட்ட வார்த்தையில் சொல்வது உண்டு. அவ்வார்த்தை தினகரனுக்கே பொருந்தும் என்று பதிலடி கொடுத்தார் முதல்வர்.

அதிரடி நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை செய்தார் தினகரன். எந்த சாவாலையும் சந்திக்க தயார் என்றார் முதல்வர். ஆகக்  கூடி கைகலப்பாக வேண்டியதுதான் பாக்கி. ஆட்சியை கவிழ்க்க வேண்டியதுதான் அடுத்த வேளை என்ற நிலையில் அதிமுக நிற்கிறது. தொண்டர்கள் என்ன நடக்கிறது என்பது புரியாமல் விழிபிதிங்கி நிற்கிறார்கள். இதுதான் கவர்ச்சி அரசியலுக்கு கிடைக்கும் கடைசி கூலி.

எம்ஜிஆர் கவர்ச்சியில் அதிமுக தொண்டராகி கொள்கை, கோட்பாடு தெரியாது வெற்றுக் கூச்சல், கோஷம் போட்டு அவருக்கு  பின்  ஜெயலலிதா என்ற சினிமா கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு எம்ஜிஆர் போய் ஜெயலலிதா வந்து இப்போது யார் என்பது தெரியாமல் விழிபிதிங்கி நிற்கிறார்கள்.

இப்போதுதாவது தமிழக பாமரன் விழித்துக் கொள்ள வேண்டும் அல்லது அவர்களை விழிப்படையச் செய்ய வேண்டும் இல்லை என்றால் மீண்டும் ஈட்டு நிரப்ப புதிய கவர்ச்சி வந்து நிற்கும்.  அது  ரஜினியா, கமலா  இல்லை கவர்ச்சியாட்டம் ஆடும் யாரவதா என்று தேடி நிற்கும் இழி நிலைக்கு  தமிழக பாமரன் தள்ளப்படுவான்.

கௌரவமான வாழ்க்கை எது? என்பதே அறியாத மக்கள் கூட்டமாக இருக்கிறது தமிழகம். இல்லையென்றால் இருட்டில் தலைவர்களை தேடி நிற்கும் அவலம் அவர்களுக்கு இருந்திருக்காது.

எளிய பாமரனுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் அதிகாரம் மற்ற பெரிய கட்சிகளிடம் கிடைக்காதபோது தன் அதிகாரத்தை பெற, உரிமைகளை வென்றெடுக்க என்ற அரசியல் புரிதலோ அல்லது அதற்கான முயற்சியோ அறியாது தனக்கு அங்கீகாரம் கொடுக்கும் எந்த யானையோ, கழுதையோ அதன் பின்னால் போகும் போக்குக்கு தயார் ஆகின்றான்.

இன்று நிலைமை சற்று மாறுதலாகி உள்ளது,  இன்றைய இளைய சமுதாயம் இப்போது இருக்கும் கட்சிகளுக்கு மாற்று வேண்டும்  என்று எதிர்பார்கிறார்கள். ஏற்கனவே உள்ள அரசியல் கட்சிகள் இவர்களிடம் அம்பலப்பட்டு போய் இருக்கிறார்கள். ஆக ஈட்டு நிரம்பும் வேளை தொடங்கிவிட்டது.  இதில் கவனமாக தேர்தெடுக்க வேண்டிய பொருப்பு இளைய சமுதாயத்திற்குதான் உள்ளது. தமிழக வருங்காலம் வளமாக இருக்க வேண்டும் என்றால் புதிய மாற்றம் வந்தே ஆக வேண்டும். இல்லையென்றால் அழிவின் விழிம்பில் நிற்கும் தமிழகத்தை காப்பாற்ற யார் வந்தாலும் இயலாது என்ற நிலைக்கு போய் விடுவோம்.

சுயநலம் ஒன்றே தன்நலம் என்று அரசியல் நடத்தும் அரசியல் கட்சிகளை  துக்கியெறிந்து, புதிய அரசியல் பாதையில் பயணிக்க முற்பட வேண்டும். ஒரு பொருள் கெட்டுவிட்டால் அதை துக்கியெறிவது போல் எறிந்துவிட்டு புதிய பொருளை வாங்கி உபயோகிப்பது போல் புதிய அரசியல் களத்தை உருவாக்க வேண்டும்.  புதிய கொள்கை, புதிய திட்டங்களோடு, அதை செயல்படுத்தும் வல்லமையோடு வருபவர்களை ஆதரித்து ஆட்சியை வழங்குவீர்களேயானால் நல்ல காலம் பிறக்கும். இல்லையேல் இவன் சரியல்ல,  அவன் சரியல்ல என்று காலத்துக்கும் லாவணி பாடிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இந்த இழிநிலை மாறி, உள்ளார்ந்த யோசிப்புடன் தேர்தெடுத்தால் கடைசியில் வெல்லப்போவது சாமானிய வாக்காளனாக இருப்பான். அது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாக இருக்கும்.

 [:]

You may also like...

Leave a Reply