[:en]அதிமுக இணைப்பு – தமிழக நலன்கள் காக்கப்படுமா இல்லை கடத்தப்படுமா? – ஆர்.கே.[:]

Advertisements

[:en]

அந்தா இந்தா என்று அதிமுக இணைப்பு நிறைவேறியுள்ளது. இது தமிழக நலனுக்கு உகந்ததா? உவப்பானது? உண்மையானதா? என்று பார்க்க வேண்டியுள்ளது.

உண்மையில் இணைப்பை ஓபிஎஸ், இபிஎஸ் விரும்பியதைக் காட்டிலும், பாஜாக மோடி விரும்பியதே அதிகம். காரணம்? பாஜாக தமிழகத்தில் காலுன்ற வழியமைத்துக் கொடுப்பதில் மோடி, அமித்ஷா கோஷ்டிகள் எடுக்கும் முனைப்புதான் இந்த தில்லாங்கடி அரசியல் விளையாட்டுகள்.

இதற்கு விலைபோனவர்கள்தான் ஓபிஎஸ், இபிஎஸ். அதிமுகவின் தலைவியாய் இருந்த செல்வி.ஜெயலிலதா தமிழக முதல்வராய் இருந்த போது மத்திய அரசுக்கு எதிராக எடுத்த பல முடிவுகள், மத்திய அரசின் காலடியில் சரண்டர் ஆனதுதான் பாக்கி. சரி போகட்டும். அதற்காக பாஜாகவின் மற்றொரு அணியாக அதிமுக மாறிப்போயுள்ளது என்பதை ஓபிஎஸ், இபிஎஸ் போட்டி போட்டுக் கொண்டு பிரதமரை சந்தித்தில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. இந்த சந்திப்புகளின் முடிவாகத்தான் இந்த இணைப்பு. இதில் தமிழக நலன் என்ன மீட்டெடுக்கப்பட்டது என்றால் ஒன்றும் இல்லை.  கட்சி இணைந்தது என்கிறார்கள். தினகரன், சசிகலாவை ஒதுக்கிவிட்டு  தீர்மானங்களை போடுகிறார்கள். தினகரன் பக்கம் 19 எம்,எல்,ஏக்கள் இன்னும்  கூடுதலாக இருப்பார்கள் என்றும்  சொல்லப்படுகிறது. ஆகக் கூடி மீண்டும் ஆட்சி  மீது  ஒரு நம்பிக்கை  தீர்மானம் கொண்டு வரப்படும் சூழ்நிலை உள்ளது.

இந்த இணைப்பின் மூலம் தமிழகத்தின் தலையாய பிரச்னையான மீத்தேன் எரிகாற்று, அணுஉலை பிரச்னை, கேயில் எரிவாயு, நீட் , மீனவ பிரச்னை என்று மத்திய அரசு சம்ந்தப்பட்ட பிரச்னைகளில் தமிழக நலன் காக்கப்படுமேயானால் இந்த இணைப்புக்கு அடிகோலிய பாஜாக மத்திய அரசு ஏதோ சிறிது  தமிழகத்தின் பால் அக்கறையுள்ள அரசாக உள்ளது என்று எடுத்துக்  கொள்ளலாம். இதற்கு ஒபிஎஸ், இபிஎஸ் எவ்வளவு அழுத்தம் கொடுத்து தமிழக சாவால்களை முறியடிப்பார்கள், சாதிப்பார்கள் என்பது கேள்வியாக உள்ளது அல்லது பாஜாகாவின் பஜனை கோஷ்டியாக மாறிபோய் தமிழக வளங்கள், நலன்கள் புறந்தள்ளப்படுமா என்று பார்க்க வேண்டியுள்ளது.

அதிமுக பிரச்னைகள் முற்று முதலாக முடிவடைந்துவிட்டது என்று தெரியவில்லை. தினகரனை புறம்தள்ளி கட்சியையும், ஆட்சியையும் நடத்தப்போவதாக இபிஎஸ், ஓபிஎஸ் அணி முடிவு எடுக்கும்போது,  அது எந்த அளவு தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் என்று தெரியவில்லை. இது நீண்ட தொடர்கதையா இல்லை முடிவுரையா என்பது விரைவில் தெரிய வரும். இவர்களால் ஓட்டு மொத்த தமிழக வளர்ச்சி பாதிப்படைகின்றது என்பது வெள்ளிடை மலையாக தெரிகிறது.  பாஜாக தனது அரசியல் கணக்கில் வெற்றியைப் பெருமா? அல்லது  தமிழக எதிர்கட்சிகள் பாஜாக வகுக்கும் அரசியல் களத்தை எப்படி முறியடிக்கப் போகிறார்கள் என்ற கேள்களுக்கு எல்லாம் பதில் காலம்தான் முடிவு செய்ய வேண்டியுள்ளது.

 [:]

You may also like...

Leave a Reply