[:en]சரிந்து வரும் இந்திய பொருளாதாரம் – ஆர்.கே.[:]

Advertisements

[:en]

 

சமீபத்திய இந்திய ரிசவர் வங்கியின் அறிக்கைப்படி பண மதிப்பிழப்பிற்கு பிறகு இந்திய பொருளாதாரம் 7.9 சதவிதத்திலிருந்து 5.7 சதவீதமாக குறைந்துள்ளதாக அறிக்கை தந்துள்ளது.

இதில் குறித்து கவனம் கொடுக்க வேண்டிய விடயமாக உள்ளதாக மத்திய அரசின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பதில் அளித்துள்ளார். இந்த நிதியாண்டின் காலாண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் 6.1 சதவீதமாக குறைந்த பொருளாதார வளர்ச்சி தற்போது அடுத்த காலாண்டில் 5.7 ஆக குறைந்துள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் 1 சதவீதம் கூடினாலோ, குறைந்தாலோ 10 லட்சம் வேலைவாய்ப்புகள் கூடுவோ, குறையவோ செய்யும் என்பது விதியாக உள்ளது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.  பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டிற்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்றார். தற்போதைய நிலைமையில் அவர் அளித்த வாக்குறுதிகள் தெளிவற்ற நிலையில் பேசிய பேச்சாக உள்ளதாகவே அறியப்படுகிறது அல்லது வெற்று கோஷம், மக்களை ஏமாற்றும் பசப்பு வார்த்தைகள் என்று எதிர்கட்சிகள் கூக்குரலிடுகின்றன.

அதிக இளைஞர்களின் மக்கள் சதவீதத்தைக் கொண்ட நாடு இந்தியா.  இதில் அவர்களின்  வருங்காலங்களுக்கு வேண்டிய வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை மத்திய  அரசுகளும், மாநில அரசுகளும் தர தவறினால். நாடு பெரும் ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்.  நாட்டின் பயங்காரவாத சக்திகளும்,  சமூக  விரோத சக்திகளும், தீவிரவாத கும்பல்களுக்கும் இளைஞர்களின் வேலைவெட்டி  வருமானம் இல்லாது சூழ்நிலையை தங்களுக்கு சாதமாக உபயோகப்படுத்தி அதற்கு இளைஞர்கள் பலியாக கூடிய சூழ்நிலை உள்ளது.

இது ஒட்டு மொத்த நாட்டின் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் வேட்டு வைக்கும் போக்காக மாறும்.  முறையான தொழில் வளர்ச்சியும், முறையான ஊதிய முறைமை,  முறையான பணிகாலம் என்று ஒரு தொழிலாளிக்கு வழங்க வேண்டிய உத்தரவாதங்களையும் ஒரு அரசு உத்தரவாதப்படுத்த  தவறினால் நாடு அமைதியற்ற சூழலுக்கு தள்ளப்படும்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்து பிரிவின் ஒட்டு மொத்த வளர்ச்சி  விகிதமே குறியீடாக அமைகிறது. அதில் முக்கிய பிரிவான தொழில் மற்றும் விவசாய வளர்சியில் நாடு பின்தங்கியுள்ளதாகவே அறியப்படுகிறது. ஆக  அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.  ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் போக்கு சிக்கன நடவடிக்கையாக மட்டுமே உள்ளது.  மானியங்கள் கட் பிரதானமாக உள்ளது. கல்வி மற்றும் பொது விநியோகம், உரமானியம் என்று பலதுறைகளிலும் மானியங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

கருப்பு பண ஒழிப்பு, கள்ள பண ஒழிப்பு,  மின்னணு  பணபறிமாற்றம் என்று ஏதோ அதிசயத்தை நடத்தப் போவதாக நம்பிக்கையை கொடுத்தவர்கள் தற்போது கருப்புப் பணமாக 16,000 கோடி மட்டுமே வந்துள்ளதாகவும், லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கணக்குகள் வரிமுறைகேடுகள் உள்ளதாக அறிப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறதே தவிர முழுமையான பலன்கள் எந்த ஒரு சாமன்யனுக்கும் இன்னும் போய் சேர்ந்த மாதிரியாக தெரியவில்லை. ஆக வெற்று வார்த்தைகள் தான் அரசியல் என்று தப்பாக பாஜக புரிந்து கொண்டிருந்தால், அது உண்மையல்ல என்பதை விரைவில் புரிந்து கொள்ளும். நாட்டிற்கு தேவையான நடவடிக்கைகளை புரிந்து அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை செய்ய வேண்டும்.

 

 

 [:]

You may also like...

Leave a Reply