[:en]சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்[:]

Advertisements

[:en]

மனிதனின் ஏற்கனவே இருக்கின்ற தெய்வீகத்தை வெளிப்படுத்துவது மதம்.

மதம் என்பது ஆன்மா சம்பந்தப்பட்டது,சமூக விஷயங்களில் தலையிட அதற்கு எந்த உரிமையும் இல்லை குறிப்பாக நீங்கள் நினைவில் வைக்க வேண்டும். ஏற்கனவே விளைந்துள்ள தீமைகள் அனைத்தும் அப்படி தலையிட்டதன் காரணமாகவே என்பதையும் மறக்கக் கூடாது.

ஒருமதம் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் அது உத்வேகம் மிக்கதாக இருக்க வேண்டும். அதே வேளையில் அதில் உட்பிரிவுகள் பெருகிக் கொண்டே போகின்ற அபாயத்தை  தடுக்க வேண்டும். பிரிவினை வாதம் அற்ற பிரிவாக இருப்பதன் மூலம் இதை நாம் தடுக்க முடியும்; ஏனெனில் இதில் ஒரு பிரிவிற்கான அனுகூலங்கள் அனைத்தும் இருக்கும், உலகம் தழுவிய ஒரு மாதத்திற்கான பரந்த தன்மையும் இருக்கும். எப்போது ஆன்மா ‘அன்பான இறைவனின்’ தேவையை ஆசையை, ஏக்கத்தை உணருமோ அப்போதுதான் மத உணர்வே ஆரம்பிக்கிறது, அதற்கு முன்பு அல்ல.

மதத்தின் ரகசியம் கொள்கைகளில் இல்லை, செயல்முறையில் தான் உள்ளது. நல்லவனாக இருப்பது, நன்மை செய்வது —– இதுதான் மதத்தின் முழுப்பரிமாணம்.

புலன்களுக்கு அடிமையாவதைத் தடுக்கும் ஆசை தோன்றும்போதுதான் மனிதனின் இதயத்தில்மத உணர்வு உதயமாகிறது. ஆகவே மனிதன் புலன்களுக்கு அடிமையாகாமல் தடுப்பதும்,அவன் தன் சுதந்திரத்தை வலியுறுத்த உதவி செய்வதும் தான் மதத்தின் முழுநோக்கம்.[:]

You may also like...

Leave a Reply