உலகம் உருவானதை உலகுக்கு உணர்த்திய திருமூலர்

Advertisements

*இந்த உலகம் எவ்வாறு உருவானது? என்ற கேள்விக்கு நான்கே வரிகளில் பதில் சொல்லும் திருமூலர்:* இந்த கேள்வியை தற்போதுள்ள எந்த அறிவியல் அறிஞர்களிடம் கேட்டாலும் பக்கம் பக்கமாக விளக்கம் சொல்வார்கள். ஆனால் திருமூலரோ நான்கே வரிகளில் அற்புதமாக பதில் சொல்லிவிடுவார். *”மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்* *கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்* *தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து* *பூதமாய்ப்* *பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே” (திருமந்திரம் – 385)* *பொருள்:* ************ நம் பெருமானிடம் இருந்து முதலில் வானம் தோன்றியது, வானத்தில் இருந்து காற்று தோன்றியது. காற்று வளர்த்தத் தீயில் இருந்து நீர் தோன்றியது. பிறகு கடினத்தன்மை கொண்ட நிலம் தோன்றியது. இந்தப் பிரபஞ்சம் என்னும் பூவில் உள்ள தேன் தான் படைப்புக்கள் அனைத்தும். அந்த அனைத்துப் படைப்புக்களும் ஐந்து பூதங்களால் ஆனவையே! *அறிவியல்:* *************** காற்றானது பெருவெடிப்பின் போது உண்டான ஆற்றலால் பிறந்தது. அந்த ஆற்றலால் பேரொளியில் (சூரியன்) இருந்து தூக்கி விசப்பட்ட நெருப்பு பிண்டம்தான் பூமி. அந்த நெருப்பில் இருந்து நீராவி மூலம் நீர் பிறந்தது அந்த நீரானது மேகமாகி மீண்டும் பூமிக்கு வந்தது. நீரானது பூமியை நிரப்பி நெருப்பை தனித்து நீருலகமாய் மாறியது. குளிர்ந்த நீர் பாறையாக (Magma) வெளிப்பட்டது. பாறையில் இருந்து மண் உருவானது. மண்ணில் இருந்து புல், பூண்டு உருவானது. இதில் இருந்துதான் மற்ற பரிமானங்களும். *உலகம் எவ்வாறு உருவானது என்று கேட்டால் பொத்தாம் பொதுவாக இறைவன் படைத்தார் என்று கூறாமல் அனைவருக்கும் புரியும் வகையில் அறிவியல் சார்ந்த கருத்துகளை முன் வைத்தார் திருமூலர். இதுதான் சனாதனத்தின் மாண்பு.* படித்ததில் பகிர்ந்த பதிவு எல்லாம் சிவம் எதிலும் சிவம் அன்பே சிவம்

You may also like...

Leave a Reply