[:en]அதிமுக அரசியல் கூத்து அல்லோகலப்படும் தமிழகம் – ஆர்.கே.[:]

Advertisements

[:en] 

அதிமுக எடப்பாடி தினகரன் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆட்சியை நடத்தி வந்த எடப்பாடி, கட்சியை நடத்தி வந்த தினகரன் என்ற நிலையில் ஓபிஎஸ் எதிரியாக கருதப்பட்டு வந்தார்.  ஓபிஎஸ் இவர்களை எதிர்த்து அரசியல் செய்து வந்தார். பின்னணியில் பாஜக நாடகம் நடத்தி வந்தது. அதில் தமிழகத்தின்  பிரச்னைகள் கவனிக்கப்படாமல் போராட்ட களமானது தமிழகம்.

தொடர்ந்து, எடப்பாடி ஓபிஎஸ் அணி சேர,  தினரன்  எதிரியானர். நாடகத்தில் காட்சிகள் மாறின, அணிகள் மாறியது. இயக்குனர் பாஜகவாவே இருந்தது.

தமிழகத்தில் அதே பிரச்னைகள் இன்னும் கூடுதலாக அரசு ஊழியர், ஆசிரியர் பிரச்னைகள்,  நீட்  மாணவர் போராட்டம் என்றும், கூடுதலாக 24 ம் தேதி முதல் போக்குவரத்து ஊழியர் பிரச்னை என்றும் அதிகமாகியுள்ளன. எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண முடியாமல், தங்கள் ஆட்சியை காப்பாற்றி கொள்ளவே  இவர்களுக்குள் சண்டையிட்டு, நித்தம் ஒரு திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இவர்கள் அவர்களை நீக்குவதும், அவர்கள்  இவர்களை நீக்குவதும் என்றும், எடப்பாடி அணி அதிமுக  பொதுகுழுத்  தீர்மானங்கள் சட்டப்படி செல்லாது என்றும், தங்கள் கட்சி அக்டோபர் மாதம் பொதுக்குழுவை கூட்டும் என்றும் தினகரன் அணி அறிவித்துள்ளது.

எடப்பாடி அணி அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் பொதுச்செயலாளர் மற்றும் துணை செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு பதில் நடவடிக்கையாக,  தினகரன் ஏவிய அஸ்திரம் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 21 பேர்  மூலம்  ஆட்சியை கவிழ்க்கவும் தயங்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்தது. இதற்கிடையே தனது ஆதரவு எம்எல்ஏக்களை கர்நாடக மாநிலம் கூர்க் ரிசாட்டுக்கு மாற்றியுள்ளார். அங்கு குதிரை பேரம் ஆரம்பமாகி அரசியலானது. எவ்வளவு கீழ்த்தரமான அரசியல் தமிழகத்தில் நடந்து வருகிறது. இதை மத்திய அரசு மௌன சாட்சியாக பார்த்து வருகிறது.

இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.  ஸ்டாலின்  சட்டசபையை கவர்னர் கூட்ட வேண்டும். இந்த ஆட்சி பெரும்பான்மையை இழந்து விட்டது. மைனாரிட்டி அரசு எந்த கொள்கை முடிவும் எடுக்க முடியாது.  அது சட்டப்படி செல்லாது என்று நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இதற்கிடையே சபாநாயகர் 18 எம்எல்ஏக்களிடம்  கவர்னரை சந்தித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, அதன் அடிப்படையில் அவர்களை பதவி நீக்கம் செய்ய முடிவு எடுத்ததைத் தொடர்ந்து,  தினகரன் அணி நீதிமன்றத்தை நாட. ஒட்டு மொத்த தமிழக அரசியலும் நீதிமன்றத்திடம் அடைக்கலம் அடைந்துள்ளனர். இங்கு கவர்னர் இருக்கிறாரா? இல்லையா அவரின் விளக்கம் என்ன ஒன்றும் தெரியவில்லை. இனி நீதிமன்றமே தமிழக அரசியலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும் போல. காரணம் 18 பேரின் தகுதி நீக்கத்திற்கு நீதிமன்றம் இடைக்காலத்  தடை விதித்துள்ளது.

ஆகக் கூடி 21ம் தேதி நீதிமன்ற வாய்தாவில் தமிழக அரசு கொடுக்கவிருக்கும் விளக்கத்தையும், நீதிமன்றம் கேட்டுள்ள விவரங்களையும் பொறுத்தும்,  நீதிமன்றம் கொடுக்கும் தீர்ப்பைப் பொறுத்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் தமிழக அரசியலில் நடைபெறும்  என்று எதிர்பார்கலாம்.

மொத்தத்தில் திரைமறைவில் நடக்கும் நாடகங்களை இரசித்து வரும் பாஜக. கழகங்கள் இல்லா தமிழகத்தை உருவாக்க பாடுபட்டு வருகிறோம் என்று கூறி அதற்கு அவர்களையே முட்ட விட்டு அழிப்பது என்ற தந்திரத்தைக் கையாளுகிறது.

தமிகழத்தின் காட்சிகள் யாருக்கோ இரசிக்கும் நிகழ்வாக  இருக்கலாம். ஆனால் தமிழக மக்களுக்கு எத்தகைய இழப்புகளை, வளர்ச்சி முடக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்பதை மக்கள் நினைவில் வைத்தே வருகிறார்கள். காரண கர்த்தாக்கள் அதற்கான விலையை கொடுத்தே தீர வேண்டும்.

 [:]

You may also like...

Leave a Reply