[:en]ஓஷோ…

?அகங்காரம் எப்போதும் இருட்டையே விரும்புகிறது.

ஒளியை கண்டு பயப்படுகிறது.

?புத்தரின் அருகே வெகு சிலரே செல்லமுடியும்.
ஏனெனில்…
அவரது ஒளி உங்களையும் அடையும்.

?அதற்கு உங்கள் இருட்டு மனம் இடங்கொடுக்காது.
பல தடங்கள்களை ஏற்படுத்தும்.

?பல ஆசைகளைக் கொண்டு வந்து உங்களைத் திசை திருப்பவே முயலும்.

?“என்னைப் புரிந்துகொள்ளாமலே…

என்னுடைய எந்த புத்தகத்தையும் படிக்காமலே…

ஏன், என்னை பார்க்கக் கூட இல்லாமலே…

நான் உண்மையிலேயே…
இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதில் அக்கரைக் காட்டாமலே…

எனக்கு எதிராக எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள் !

?இது எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது.

எதிரியாக இருப்பதற்கு கூட ஒருவன் என்னை நெருங்கி வரவேண்டும்.

என்னை உற்றுப் பார்க்கவேண்டும்.
நான் செய்வதில் எது அவனுக்கு உடன்பாடில்லை என்று புரிந்து கொள்ளவேண்டும்.

?ஆனால்…
என்னைப் பார்க்காமலே…
என்னை புரிந்துகொள்ளாமலே…
என்னை எப்படி அவர்களது எதிரியாகப் பாவிக்கமுடியும்?
ஒரு சிலர் என்னை கொல்லக் கூட தயாராக இருக்கிறார்கள்.

?இவர்களுக்கு என்ன நேர்ந்தது?

அவர்களிடம் உள்ள அந்த அகங்காரம்தான்…
என்னை கண்டு பயப்படுகிறது…

என்னை வெறுக்கிறது…
அது என்னை சந்திக்கவோ…
என்னை கேட்கவோ அச்சப்படுகிறது…

?ஏனெனில்…
என்னை நெருங்கினால்…
அகங்காரம் அதன் மரணத்தை நெருங்குவதற்கு சமம்.

ஆகவே…

?அவர்கள் எப்போதும் தங்கள் குருட்டுதன்மையிலேயே…
தன் அறியாமையிலேயே.. இருக்கத்தான் விரும்புவார்கள்.

[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *