ஜென்_குரு

Advertisements

ஜென் குருவிடம் “பிறர் கோபமாக திட்டினால் அவமானப்படுத்தினால் எப்படி செயல்பட வேண்டும்? – சீடன் கேட்டான். “நீ கழுதையா? எருமையா? குதிரையா? எதைப்போல செயல்படுவது என்பதை முடிவு செய்” – குரு. – கழுதையை அடித்தால் பின்னங் காலால் உதைக்கும். – எருமையை அடித்தால் எதுவும் செய்யாது. அப்படியே இருக்கும். – குதிரையை அடித்தால், அதையே கட்டளையாக எடுத்துக் கொண்டு இலக்கை நோக்கி வேகமாக ஓடத் தொடங்கும். பிறர் நம்மை கோபமூட்டும்போது – அதை மனதிற்குள் தூக்கி வைத்து உடலுக்குள் ஊடுருவி மனச்சோர்வு, மனக்கசப்பு அடைந்து மற்றவரிடம் கத்தலாம்; திட்டலாம்; கேவலப் படுத்தலாம். இது பின்னோக்கி செல்தல். ஒன்றும் செய்யாமல் அப்படியே இருத்தல் இது மற்றொன்று. மாறாக – அதையே ஒதுக்கித் தள்ளி விட்டு, மனதிலும் மறந்துவிட்டு குறிக்கோளை நோக்கி வேகமாக ஓடவும் செய்யலாம். இது தான் முன்னோக்கிச் செல்தல்.

You may also like...

Leave a Reply