நீயும் கடவுள்தான்

Advertisements

“நீயும் கடவுள்தான்” என்ற அத்வைத கருத்தை முதன் முதலாகப் படித்த போது, ஆச்சரியமும் கொஞ்சம் கர்வமும் அடைந்தேன்! இது இரண்டாம் வகுப்போ மூன்றாம் வகுப்போ படிக்கும் போது, டீச்சர் “எல்லோரும் இந்நாட்டின் மன்னர்களே” என்று கூறி, நீயும் மன்னன்தான் என்று கூறிய போதும் முதன் முதலில் இந்த ஆச்சர்யமும், கர்வமும் ஏற்பட்டது. நீயும் கடவுள் என்று கூறிய போது இரண்டாம் தடவையாகவும் ஏற்பட்டது! இரண்டுமே இயல்பில் உண்மைதான்! ஆனால் எதார்த்தத்தில்? நான் எப்படி நரேந்திரமோடியாவேன்? நான் எப்படி சிவா ஆவேன்? ஒரே விசயம் ஒரு தளத்தில் உண்மையாகவும் பிரிதொரு தளத்தில் பொய் போலவும் தோன்றுகிறதே! அது எப்படி? இயல்பில் மனிதனாக இருந்தால் எதார்த்தத்திலும் மனிதனாகத்தான் இருக்க முடியும். அப்படித்தான் இருந்தும் வருகிறோம்! இங்கே மட்டும் என்ன வந்தது? 125 கோடி மன்னர்கள் பல கர்மங்களைச் செய்து சேமித்த சக்தியை, ஒன்று திரட்டி பிரயோகப் படுத்த நரேந்திர மோடியால் முடிவதால் அவர் Acting King! நாமெல்லாம் Sleeping kings! இந்த sleeping kings இல்லாமல் acting king கிடையாது! அதே போல கடவுளைப் பொறுத்த வரையில்.. நாமெல்லாம் sleeping ஆன்மா!! நம் மூலம் கர்மத்தை இலங்கச் செய்து காரியம் ஆற்றுவதால், கடவுளானவர் Acting ஆன்மா!! ஆக இங்கும் இந்த sleeping ஆன்மாக்களாகிய நாமெல்லாம் இல்லாமல் கடவுளால் கூட அவரை அறிய முடியாது. *கர்மத்தால் கர்ம அதீதம் உணரப்படுகிறது* ௐ நமசிவாய போற்றி ௐ !!

You may also like...

Leave a Reply