[:en] கமல் அரசியல் பிரவேஷம் —- அரசியல் கட்சிகளிடம் பதட்டம்[:]

[:en]

நடிகர் கமலஹாசன் திரைத்துறையில் பல்வேறு வேடங்கள் கட்டி, நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றவர். சமீப காலமாக அவர் தமிழக அரசியல் தலைவர்களை குறிப்பாக ஆளும் அதிமுக அமைச்சர்களையும், எம்எல்ஏக்களையும் தாக்கி அறிக்கை விட்டுவருகிறார்.

சமீபத்தில் விவசாய சங்கத் தலைவர் பாண்டியன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் நானும் உழவர் மருமகன் என்று சொல்லி ஏரி, குளங்களை துர்வாருதற்காக தனது நற்பணி மன்றத்தார் விவசாயிகளோடு இணைந்து பணி புரிவார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அக்டோபர் 7ம் தேதி நடந்த தனது பிறந்தநாள் விழாவில் அரசியலுக்கு வரப்போவது உறுதி என்று தனது இரசிகர்களுக்கு உற்சாகம்  ஊட்டினார். தனது அரசியல் பயணத்துக்கு 30 கோடி தேவை என்றும். அதற்கான பணத்தை தனது நற்பணி மன்றத்தாரிடம் இருந்தும் நல்ல உள்ளம் கொண்டவர்களிடம் இருந்தும் பெறப்போவதாக அறிவித்தார்.

தமிழ்நாட்டில் அரசியல் செய்ய பஞ்சமில்லாமல் ஆட்கள் உண்டு. ஆனால் மக்களுக்கு தொண்டு செய்யத்தான் ஆட்க இல்லை.  இப்போது புது வரவாக வர இருக்கும் கமலஹாசனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பல்வேறு விமசர்னங்களை கொண்டுள்ள கமலஹாசன், தமிழக மக்கள் எதிர் கொண்டுள்ள பிரச்னைகளில் அவரின் நிலைப்பாடு என்ன? என்ன செயல்பாடுகளை தன்னுடன்   பயணிக்கப் போவோரோடு செய்யப் போகிறார் என்ற தெளிவில்லை.

கமல், ரஜினி இருவரின் அரசியல் வருகை. ஏற்கனவே உள்ள கட்சிகளிடம் பெரும் அதிருப்தியே நிலவச் செய்கிறது. குறிப்பாக இவர்கள் பிரவேஷம், இரு மாபெரும் கட்சிகளான திமுக. அதிமுக ஒட்டுக்களை பிரிக்கப் போவது எத்தனை சதவீதம். அது யாருக்கு சாதகம் மற்றும் பாதகமாக இருக்கப் போகிறது. அதில் வெற்றி வாய்ப்பை இழக்க போவது யார்எ என்பதெல்லாம் கேள்விகளாக உள்ளது.

பிரபலங்களுக்கு என்று சில ஆயிரம் ஓட்டுக்கள் பிரிந்தாலும் அது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஓட்டுக்களாகவே இருக்கும். இவ்வொட்டுகளை இழக்கப்போவது யார்? அதை எப்படி பெரிய கட்சிகளான திமுக, அதிமுக சரி செய்யப் போகிறது என்பதும் கேள்வியாக உள்ளது.

தமிழ் தேசியம் பேசும் சீமான், வேல்முருகன் மற்றும் பல தமிழ் அமைப்புகள், கட்சிகள்  ஒன்று சேர்ந்து புதியவர்களின் வாக்குகளை தங்களுக்கு சாதகமாக வாங்க போகிறார்களா? அல்லது புதிதாக வரப்போகும் கமல், ரஜினியிடம் அந்த வாக்குகள் பிரியப்போகிறதா? என்ற கேள்விகள் எழுகின்றன.

30 சதவீதத்திற்கும் மேலாக ஓட்டு வங்கி வைத்துள்ள அதிமுக. திமுக இரண்டில், அதிமுக நான்கு பிரிவாக பிரிந்தபின், திமுக மட்டுமே வலுமையான நிலையில் உள்ளது. இவர்களின் இந்த 60 சதவீதத்துக்கும் மேலான வாக்குகளில் எவ்வளவு சதவீதம் பிரியப்போகிறது. அல்லது அவர்கள் மீதமுள்ள 40 சதவீத வாக்குகளையும் சேர்ந்து வாங்கப்போகிறார்களா என்பதும் கேள்வியாக உள்ளது.

குழம்பிய குட்டையில் ஈஸியாக மீன் பிடிக்கலாம் என்று குதிப்பவர்கள் கமல், ரஜினி. சினிமா ஈர்ப்பு செல்லுபடியாகுமா அல்லது ஆகாத என்பதை அவர்கள் நேரடியாக புரிந்து கொள்ள விரைவில் வர  இருக்கும் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் மற்றும்  உள்ளாட்சி தேர்தலில் அவர்களின் நிலைப்பாடு யாரோடு கூட்டணி அல்லது தனித்து போட்டி, எவ்வளவு வாக்கு சதவீதத்தை பிரிப்பார்கள் என்பதெல்லாம் சேர்த்து பார்க்கும் போது. தமிழகத்தின் அரசியல் கட்சிகளுக்கு கமல், ரஜினி ஒரு வேண்டாத தலைவலி என்பதை அவர்கள் உணர்ந்தே உள்ளனர். இதுவரை நடிகர்களை தங்கள் வாக்கு சேகரிக்கும் இயந்திரங்களாக பார்த்த அரசியல் கட்சிகள். இப்போது வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா என்ற திமுக கட்சி பாடலைபோட  பொருத்தி பார்க்க வேண்டியுள்ளது. அந்த பயம் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் உண்டு. நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகர்களின் ஒளி மங்கப்போகிறதா?அல்லது இவர்களின் ஒளியில் ஏற்கனவே உள்ள கட்சிகளின் ஒளி மங்கப்போகிறதா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

நடிகர்கள் பின்னால் போகும் கவர்ச்சி அரசியல் எடுபடுமா அல்லது கொள்கை சார்ந்த அரசியல் மற்றும் தலைவர்களை மக்கள் ஆதரிப்பார்களா என்பது வரும் காலங்கள் பதில் சொல்லும். மக்கள் ஒரு  தெளிவான  முடிவை எடுப்பார்களேயானால் தமிழகம் தப்பிக்கும்.

 [:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *