[:en]இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு – அரசியல் என்ன? – ஆர்.கே.[:]

Advertisements

[:en]

கடந்த எட்டு மாத காலமாக தேர்தல் கமிஷன் முன்னாள் பிரதான பிரச்னையாக இருந்தது இரட்டை இலைச்சின்னம் யாருக்கு என்பது.

உத்தரபிரதேஷத்தில் சமாஷ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்டபோது உடன் முடிவு எடுத்த தேர்தல் கமிஷன். தமிழகத்தில் ஏற்பட்ட பிரச்னையில் கால தாமதப்படுத்தி இத்தீர்வை வழங்கியிருப்பது அரசியலாக இருக்க கூடுமோ என்பதில் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன.

தமிழக அதிமுக அணி சசிகலா மற்றும் ஓபிஎஸ் அணியாக பிளவு ஏற்பட்டவுடன், இரட்டை இலைச்சின்னம் எங்களுக்கே, உண்மையான அதிமுக நாங்களே என்று தேர்தல் கமிஷனை நாடினர் ஓபிஎஸ் அணியினர். அதற்கு சசிகலா அணியினர் உண்மையான அதிமுக நாங்களே என்று எழு லட்சம் உறுப்பினர்கள் ஆவணங்களை அவர்கள் ஒப்புதல் பெற்று தேர்தல் கமிஷனில் ஒப்படைத்தனர். அதில் பாதிக்கு மேல் போர்ஷரி உண்மையான ஆவணங்கள் அல்ல என்ற குற்றச்சாட்டை ஓபிஎஸ் அணியினர் வைத்தனர்.

உண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பதும், அதில் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளும் தான் தேர்தல் கமிஷனுக்கு சென்றது. ஆர்கே நகர் இடைத்தேர்தல் இடையே வரவே இரட்டை இலைச்சின்னம் யாருக்கு என்ற பிரச்னை எழுந்தது. இப்போது அதே ஆர்கே நகர் பிரச்னை இரட்டை இலை பிரச்னையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

ஆக ஆர்கே நகர் இடைத் தேர்தல் இப்பிரச்னையில் உடன் முடிவு ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் கமிஷன் தனது முடிவை அறிவித்துள்ளது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பதற்கான முடிவை அது சொன்னதாக தெரியவில்லை. ஒட்டு மொத்தமாக அதிமுக யார், இரட்டை இலைச்சின்னம் யாருக்கு என்று ஒட்டு மொத்த எம்பி, எம்எல்ஏ மற்றும் பொதுக்குழு நிர்வாகிகளின் எண்ணிக்கை அடிப்படையில் தீர்ப்பை எழுதியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே விதி என்றும். ஆக பொதுக் குழுவைக் கூட்டி அடிப்படை உறுப்பினர்களின் வாக்குகளை பெற்று பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற விதியை மீறி இந்த உத்தரவு தரப்பட்டுள்ளதாகவும்
கூறப்படுகிறது.

டிடிவி தினகரன் சமீபத்தில் அளித்த நேர்காணில் தேர்தல் கமிஷன் முறையாக அதிமுக பைலாவை ஆராயமல் கொடுத்த ஒருதலைப்பட்ஷமான தீர்ப்பு இதை எதிர்த்து நாங்கள் நீதிமன்றத்தில் முறையிட்டு சின்னத்தையும், கட்சியையும் மீட்போம் என்கிறார்.

ஆக மொத்தத்தில் எடப்பாடி அணி சின்னத்தை, கட்சியை வென்ற வெற்றி களிப்பில் உள்ளது. இதில் எங்கள் பங்கே அதிகம் என்று ஓபிஎஸ் அணியினருக்கும், எடப்பாடி அணியினருக்கும் முட்டல் மோதல் ஆரம்பித்துள்ளது. ஓபிஎஸ் அணியின் மைத்ரேயன் வானிலை அறிக்கை கொடுப்பது போல் அவ்வப்போது டிவிட்டரில் அதிமுக வானிலை அறிக்கை கொடுத்து பரபரப்பை ஏற்படுததி வருகிறார்.

இதைத்தான் எதிர்பார்த்தோம் கண்ணா என்பது போல் இது விருபபம் இல்லாது நடந்த கல்யாணம் எடப்பாடி-ஓபிஎஸ் இணைப்பு, ஆகையால் இது விவகாரத்து ஆகும் என்று தினகரன் அணியினர் சொல்லி வருகின்றனர்.

ஆக அதிமுக குழப்பம் தீர்ந்தபாடில்லை. தமிழகம் குழப்பத்திலே நாட்களை கடத்துகிறது என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது. இதற்கிடையே ஆர்கே நகர் தேர்தல் ஜுரம் வேறு கட்சிகளுக்கு அடிக்க ஆரம்பித்துவிட்டது. கடும் போட்டியை சந்திக்க வேண்டியது இருக்கும். கடும் கண்காணிப்பையும் சந்திக்க வேண்டி இருக்கும்.

சின்னம் ஒதுக்கப்பட்டால் எடப்பாடி அணி வாக்குகளை தக்க வைக்கும் என்ற கணக்கில் அரசியல் பின்பலத்துடன் சின்னம் எடப்பாடி அணிக்கு வந்துள்ளதாகவும், ஒருதலைப்பட்சமாக தேர்தல் கமிஷன் அளித்துள்ள தீர்ப்பு என்றும் பொதுவாக அனைவரின் கருத்தாகவும் உள்ளது.

மைய அரசு டிடிவி தினகரனுக்கு எதிராக எடுத்த மற்றொரு நடவடிக்கையாகத்தான் இதை பார்க்க வேண்டியுள்ளது. காலம் கடந்த நடவடிக்கை, அதே சமயம் தேவையான நேரத்தில் மாநில அரசுக்கு சாதகமான முடிவு என்பதையெல்லாம் பார்க்கும் போது மாநில மைய அரசுகளின் அரசியல் விளையாட்டு இதில் இல்லாமை இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

எப்படியோ சின்ன விவகாரம் தற்போதைக்கு முடிவுக்கு வந்தாலும், ஆர்கே நகர் தேர்தல் முடிவு என்ன சொல்லப் போகிறது, எடப்பாடி-ஓபிஎஸ் அணியினரின் புகைச்சல் என்ன ஆகப்போகிறது என்பதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது அதிமுக இன்னும் ஆட்டத்தில் தான் உள்ளது. அதை எப்படியாவது காப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் மைய அரசு இருப்பது புரிகிறது. இதில் பாரதிய ஜனதா சாதிக்க நினைக்க இருப்பது போகப் போக நமக்கு புரியும் என்றே தோன்றுகிறது.

[:]

You may also like...

Leave a Reply