[:en]எனது ஆன்மிகம் –  ஆர்.கே.[:]

Advertisements

[:en] 

 

 

நண்பர்களே ஆன்மிகத்தில் 20 வருட காலங்கள் பல்வேறு அமைப்புகளில் பங்கேற்ற வகையில் அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை, வழிமுறைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதே என் நோக்கம். எனது ஆன்மிகம் என்று தலைப்பு வைத்துள்ளேன், அதற்கு காரணம் நான் ஆன்மிக பயணத்தில் இதுவரை பயணித்த விவரங்களை,  உணர்ந்த விஷயங்களை, சந்தித்த நபர்களை, அமைப்புகளை உங்களுக்கு எனது பார்வையில் அதன் சிறப்புகளை எடுத்துச் சொல்லும் வழியாக கருதுகிறேன். இதில் இடம்பெறும் கருத்தில் தவறுகள் இருந்தால் திருத்திக் கொள்கிறேன். சுட்டிக்காட்டலாம். விமர்சிக்கலாம்.

முதலில் ஆன்மிகம் என்றால் என்ன?  என்ற கேள்வியுடன் நாம் தொடங்குவோம்.  ஆன்மிகம் என்ற வார்த்தையை அடிக்கடி நம் அன்றாட  வாழ்க்கையில் பலரும் உபயோகிப்பதை பார்க்கிறோம். அது என்ன ஆன்மிகம் என்று பலருக்கும் தோன்றக் கூடும். சரி அது எதுவோ பக்தி சார்ந்த விஷயம், கடவுள் சார்ந்த விஷயம் என்று எளிமையாக புரிந்து கொள்கின்றனர்.

அது ஒரளவுக்கு உண்மை என்றாலும், முழுமையாக ஆன்மிகம் என்றால் அதுதான் என்று சொல்லிவிட முடியாது. பிறகு அது என்ன என்று நீங்கள் கேட்க முன் வருவீர்கள் என்றால் அங்கு தொடங்குகிறது உங்கள் ஆன்மிகம்.

சரி ஆன்மிகத்தை அறிந்து கொள்வதற்கு முன்பாக எல்லோரும் அறிந்த பக்தியில் இருந்து தொடங்குவோம்.

மனிதன் ஏதோ ஒருவகையில் மதசார்பு உள்ளவனாக உள்ளான். தான் பிறக்கையிலே ஒரு மத அடையாளத்துடன்  பிறக்கிறான். வளர்ந்தபின் அவன் சிந்தனை மாற்றத்தால் அவன்நிலைப்பாடு மாறலாமே தவிர பிறப்பால் ஏதோ ஒரு மத அடையாளத்துடனே பிறக்கிறான். இதைத்தான் மத ஆட்சி என்கிறோம். இவ்வுலகில் இருவேறு ஆட்சிகள் உள்ளன. அரசாட்சி, குடியாட்சி அல்லது மக்களாட்சி, அதே சமயம் மத ஆட்சி  என்பதும் நடைமுறையில் இருந்துள்ளது. எந்த ஒரு அரசும் மத குருமார்களின் வழிகாட்டுதல்படியே நடந்து வந்துள்ளன. பல சந்தர்ப்பங்களில் அவர்களின் முடிவே இறுதியானதாகவும் இருந்துள்ளது. அரச முடிவையும் தாண்டி,  மத குருமார்களின் முடிவு முக்கியமாக கருதப்பட்டு வந்துள்ளது. இதை எதிர்த்து புரட்சி செய்தவர்களும் உண்டு. அவர்களை அரச சக்திகளால் பழி வாங்கப்பட்டதும் உண்டு. உதாரணமாக இயேசுகிருஸ்து, யூத மத குருமார்களின் எண்ணங்களுக்கும், கோட்பாடுகளுக்கும் எதிராக பேசினார் என்று சிலுவையில் அறையப்படுகிறார். இளைஞர்களை தட்டி எழுப்பினார் என்று விஷம் கொடுத்து கொல்லப்படுகிறார் சாக்ரடீஸ், உலகம் உருண்டை  என்று சொன்னதால், கிருஸ்துவ மத தலைவர் போப்பால் தண்டிக்கப்படுகிறார் கலீலியோ. எண்ணற்ற உதாரணங்கள் உண்டு.

உலகம் என்னும் தேரை மதம், அரசு என்ற இரட்டைக் குதிரைகள். இழுத்துச் செல்லுகின்றன. இதில் கடவுள் பயணித்து உலகை ஆளுகை செய்கிறார் என்று கருதப்படுகிறது. ஆகையால் மதத்தலைவர்களையும், அரசனையும் கடவுளின் பிரதிநிதியாக உலகம் வெகுகாலம் கருதி வந்துள்ளது. இப்போதும் கருதுகிறது.

தொடரும்….[:]

You may also like...

Leave a Reply