[:en]எனது ஆன்மிகம் – 4 ஆர்.கே.[:]

Advertisements

[:en]

பிறகு ஒருநாள் நீ கடவுளுக்கு அன்னியப்பட்டோ அல்லது அவரின் அடிமையாகவோ  மாறிப்போவாய். உண்மையில் கடவுள்  யார்?  இருக்கிறாரா அல்லது இல்லையா? என்பதைக் கூட நீ அறிய தலைப்பட மாட்டாய். இந்த உலக வாழ்க்கையின் இன்ப துன்பத்தில் உழன்று பிறகு இளப்பாறும் இடமாக மத ஸ்தலம் மாறிப்போகும். அதுதான் இன்றய நிலை.  இப்படிச் சொல்வதால் நான் இதில் இருந்து விடுபட்டு உங்களுக்கு இதைச் சொல்கிறேன். நான் ஞானியாகவிட்டேன் என்று கருத வேண்டாம். இது எனது அனுபவத்தில் பார்த்த விஷயமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படியாக ஒரு பொது ஒழுங்குக்காக ஏற்படுத்தப்பட்ட மத அமைப்பின் சார்பில் தான் உன் கடவுள் கொள்கை இருக்கிறது. நீ உன் மதக்கோட்பாடுகளின் கொள்கைப்படி உருவமோ அல்லது உருவமற்றோ கடவுள் வழிபாட்டி தொடங்குகிறாய்.  எவ்வளவோ காலம் நீ கடவுளோடு பேசுகிறாய். ஆனால் கடவுள் உன்னோடு பேசியதாக உன்னால் கூறமுடியவில்லை. ஆனால் கடவுள் என்னோடு பேசினார் என்று சிலர் கூறுவார்கள். ஆனால் அதை எல்லோரும்  ஒத்துக் கொள்ளும் வண்ணம் நிறுவ முடிந்ததில்லை. ஆக கடவுள் கொள்கை அவரரவர் தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் பிறப்பு சார்ந்து அமைந்து விடுகிறது.

உண்மையில் கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலை நாம் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கிறோம். தேடிக் கொண்டே இருக்கிறோம். அது எதோ ஒருவகை நம்பிக்கையாக மாறும் போது சடங்கு, ஆச்சாரங்களில் மாட்டிக் கொண்டு கடவுளை திருப்திப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு, நம்மையும் திருப்திப்படுத்திக் கொள்கிறோம். இந்த நிலை ஏன் நமக்கு ஏற்படுகிறது. நாம் ஏமாற்றத்தில் வாழ அல்லது ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள இயலாததுதான். நாம் சந்திக்கும் சவால்களில் எல்லாம் நாம் வெற்றி பெற்றுவிடுவதில்லை. பெரும்பாலான சந்தர்பங்களில் நாம் தோல்வியை தழுவுகிறோம். ஏன் என்றால் நாம் ஏதோ ஒரு கொள்கை சார்ந்து, கருத்தியல் சார்ந்து, நம்பிக்கை சார்ந்து வாழ்வதால், நமது முடிவுகளும் அதைச் சார்ந்ததாக இருக்கிறது. வாழ்க்கையின் நிகழ்வுகள் உங்கள் கொள்கை, கருத்து, முடிவுகள் சார்ந்து உங்களை சந்திக்க வருவதில்லை. அது எப்போதும் தற்செயலானது. அதை சந்திக்கும் நாம் தாம் பழமையானவர்கள்.

ஆக உங்கள் சவால்களை நீங்கள் அறிந்த விஷயங்களில் இருந்து, ஒத்துப்பார்த்து சரி தவறு என்று முடிவு எடுக்கிறீர்கள். அது பெரும்பாலும் தவறாக போகிறது. எப்போது உங்கள் சவால்களை சரியாக புரிந்து அதை சமாளிக்கத் தெரியாதபோது அல்லது அதற்கு விடை காண முடியாத போது ஏமாற்றம் எஞ்சி நிற்கிறது. அதை தாங்கிக்  கொள்ள முடியாது போது அல்லது அதற்கான சக்தி இல்லாத போது நமக்கு ஒரு துணை தேவைப்படுகிறது. அது யாரும் அறியாத கடவுளாக இருக்கிறது. உங்கள் ஏமாற்றம், பழி, பாவம், நல்லது, கெட்டது என்று அனைத்திற்கும் ஒரு  வடிகாலாக கடவுளை உபயோகப்படுத்துகிறீர்களே தவிர உண்மையில் கடவுளை அறிந்து கொள்ளும் நிலையில் நீங்கள் இல்லை.

சரி நான் கடவுளை உண்மையிலே அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது. நான் கடவுளை அறிந்து கொள்ள வேண்டும் என்ன செய்ய வேண்டும். என்கிறீர்கள். நான் உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்துகிறேன். ஆரம்பத்தில் நான் சொன்னது போல் கடவுளின் ஆரம்பம் மதகுருமார்கள் என்பதில் இருந்து தொடங்குகிறது. கடவுள் ஒரு நபராக அவர்களால்தான் சுட்டிக் காட்டப்பட்டார்.

தொடரும்……[:]

You may also like...

Leave a Reply