[:en]எனது ஆன்மிகம் – 11 ஆர்.கே.[:]

Advertisements

[:en]

கடவுளை திருப்திப்படுத்த இந்த யஞ்ய குண்டம் வளர்தெடுக்கப்பட்டு, அவருக்கு பிரியமான பொருள்களை இவர்கள் அதில் ஈட்டு, வேத மந்திரங்களை சொல்லி வேள்வியை நடத்துகிறார்கள். இது ஒரு சடங்காச்சாரமாக உள்ளது. இதன் மூலமாக கடவுளை மனிதன் அறிந்து கொள்கிறானா என்றால் அறிவுபூர்வமாக பார்த்தால் அப்படித் தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கு அருளப்பட்ட வேதத்தின் அடிப்படையில் இந்த வேள்வி நடைமுறையை கைக் கொள்வதாக கூறுகிறார்கள்.

ஆக வேள்வி மன விருப்பங்களை கடவுளர்கள் மூலமாக நிறைவேற்றிக் கொள்வதற்கான வழியாக சொல்லப்படுகிறது. உலக மக்கள் ஆசாபாசங்கள் நிறைந்த மாயா உலகத்தில் வாழ்கிறார்கள். அவர்களின் விருப்பங்களை வேள்வி மூலமாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று ஐந்தாயிரம் வருடங்களாக இவை செய்யப்பட்டு வருகின்றன. சாதாரண மக்களுக்கு உபயோகப்படும் கருவியாக வேள்வி சொல்லப்படுகிறது. இதன் மூலமாக கடவுளை அடைந்து விட முடியுமா? என்றால் அது  முடியாது என்றே தோன்றுகிறது.  ஆக கடவுளை தேடுபவர்களுக்கு ஹிந்து மதம்  வழிகாட்டவில்லையா என்றால் ஏன் இல்லை  நிறைய வழிகளைக் காட்டுகிறது.

வேதங்களில் உயர்  உண்மைகளை புரிந்து கொள்வதற்கு அவைகளில் கொடுக்கப்பட்ட கருத்துக்களை தொகுத்து, சுருக்கி உபநிஷத்துகள் என்ற நு£ல்களை கொண்டு வந்தார்கள்.  உபநிஷத்துகளில் உள்ள கருத்துக்கள் கேள்வி, பதிலாக இருக்கும். இதில் நீங்கள் உயர் உண்மைகளை புரிந்துகொள்ள முடியும். கடவுள் யார், நீங்கள் யார்,  உலகம் எப்படி உண்டானது என்பது போன்ற அடிப்படை கேள்விக்கு அது பதில் தருகிறது.

இந்த உபநிஷத்துகளின் ஆதாரத்தில்தான் ஹிந்து மதம் தனது ஆன்மிக கருத்துக்களை பரப்பி வருகிறது. அதில் தேர்ந்த ஞானிகள்,  முனிவர்கள், சாதுக்கள் பல அமைப்புகளை நிறுவி உலகமெங்கும் ஹிந்து மதத்திற்கு தொண்டாற்றி வருகிறார்கள்.

ஸ்ரீஇராமகிருஷ்ண பரம ஹம்சர் ஆசிரமம்

அதில் முக்கிய பங்கு வகித்தது கல்கத்தாவில் உள்ள ஸ்ரீஇராமகிருஷ்ண பரம ஹம்சர் ஆசிரமம். ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் கல்கத்தாவில் உள்ள கங்கைக் கரையில் அமைந்துள்ள காளி கோவிலின் பூசாரி. இவர் காளிக்கு பூஜைகள் செய்து வந்தார். காளியின் மீது மிகுந்த பக்தி ஏற்பட்டு,  அவள்பால் உள்ள அன்பின் மிகுதியில் காளியை காண வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் விரும்பிய வண்ணமே அவர் பூஜித்து வந்த காளி அவருக்கு பிரசன்னமாய் காட்சி தருகிறார். காளியின் காட்சியைக் கண்ட பரமஹம்சர் ஆனந்தக் கூத்தாடுகிறார். அதன் பிறகு அவருக்கு நினைத்த மாத்திரத்தில் காளியின் தரிசனம் கிடைக்கிறது.  அத்தோடு அவர் மனம் நிறைவடையவில்லை.  அதையும் தாண்டி அவர் மனம்  தேடுதலில் வயப்படுகிறது.

காளியின் காட்சி மட்டும் அவரை திருப்திப்படுத்திவிடவில்லை. அவருக்கு அவர் குரு தோத்தாபுரி என்பவர் வழிகாட்டுகிறார்.  உனது ஆன்மிக தேடுதலுக்கு தடையாக இருப்பதே இந்த காளியின் பிம்பம்தான் என்று அவர் நெற்றியில் கண்ணாடியால் கிழிக்கிறார். அப்போது அவர்  மனக்காட்சி உடைகிறது. மனம் கடந்த நிலைக்கு அவர் உயருகிறார்.  உயர்  ஞானத்தை அடைகிறார்.

தொடரும் ………[:]

You may also like...

Leave a Reply