[:en]எனது ஆன்மிகம் – 14 ஆர்.கே.[:]

[:en]

ஒன்றை கற்றுக் கொள்வதுதான் கல்வி. அது அவனுக்கு தேவையான வழியை காட்டுகிறது. நீங்கள் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு மனிதனுக்கும் உதவ முடியாது. அதுசாத்தியமில்லாதது. ஆகையால் அவன் அவனை நிலைப்படுத்திக் கொள்ள ஒரு வழியை காட்டினால் அதன் மூலம் அவன் தன்னை வளப்படுத்திக் கொள்ள முடியும். அதற்கான தெளிவை தர வேண்டும். உதவ வேண்டும். இதுதான் தானம்.

ஆனால் நாம் அப்போதைக்கு அப்போது நம்மால் முடிந்த உணவோ, உடையோ, பொருளோ தருகிறோம். இது தவறு என்று சொல்ல முடியாது. ஆனால் அது அவனுக்கு அந்த நேரத்திற்கான உதவியாக இருக்கும் அவ்வளவே.

உண்மையான உதவி நிலைத்த வளர்ச்சிக்கு உதவுவதே. அதை கல்விதான் தர முடியும் என்றும் நம் முன்னோர் உணர்ந்துதான் தானத்தில் சிறந்த தானம் கல்வி தானம் என்று கூறியுள்ளனர்.

இத்தானம் கூட சிறந்த தியாகத்தாலும், கருணையாலும் தான் சாத்தியப்படும். இல்லாவிடில் இதைச் செய்ய சாத்தியம் இல்லை. பல கல்விக் கூடங்களுக்கான இடங்கள் பலரால் நம் நாட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. பல தொண்டு நிறுவனங்கள் கல்விச்சாலைகளை அமைத்துள்ளன. எல்லோரும் அதற்கான பணிச் செய்துள்ளனர்.

ஆனால் இன்று கல்வி காசாகப் பார்க்கப்படுகிறது. இதை தவறு என்று ஏன் சொல்லுகிறோம் என்றால். கல்வி என்பது தானத்தில் வருகிறது. அதை காசாக்குவது தவறு இல்லையா?  நீங்கள் செலுத்தும் வரிப்பணத்தில் அரசாங்கங்கள் உங்களுக்கு  அந்த தானத்தை கொடுக்க  வேண்டும்.

அதை விடுத்து கல்வியை காசாக்குபவர்களை கண்டிக்க வேண்டும். தடை செய்ய வேண்டும். இன்று எத்தனையோ பேர் உயர் கல்வி பெற முடியாமல் தவிப்பதற்கு காரணம் கல்வி காசனதன் விளைவுதான். ஆகையால் கல்வியை தானமாக புரிந்து கொண்டு கல்வியை சேவையாக செய்ய வேண்டும்.

இது தியாகத்தாலும், சக மனிதன் மேல் உள்ள அன்பாலும்  நிகழும் விஷமாகும். இந்த தியாக குணம் மகத்தானது. அன்பு அற்புதனமானது. நீங்கள் கடவுளை நோக்கி பறந்த செல்ல இந்த இரண்டு இறக்கைகள் போதும். உங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

இத்தகைய தானத்தை தருவதில் தலையாய பணியாக கொண்டவர்கள் ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சர் ஆஷ்ரமத் து றவிகள்.

தொடரும்…

 [:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *