[:en]எனது ஆன்மிகம் – 18 ஆர்.கே.[:]

Advertisements

[:en]

சுவாமி சிவானந்த பரமஹம்சர்

அடுத்ததாக நான் உங்களுக்கு சொல்லப்போவது சிவானந்த பரமஹம்சர் என்ற யோகி சொல்லி தந்த வாசி யோகம் பற்றி நான் அறிந்து கொண்டதை. நண்பர்களே நான் மதுரையில் இருக்கும்போது எனது நண்பர் ஒருவர் ஒருநாள் சுவாமி சிவானந்த பரமஹம்சரின் சித்த வேதம் என்ற புத்தகத்தை எனக்கு படிக்க கொடுத்தார். இப்புத்தகம் சித்த சமாஜம் கேரள மாநிலம் வடகரை என்னுமிடதில் அமைந்துள்ள ஆஷ்ரமத்தின் மூலம் வெளியிடப்படுகிறது.

இப்புத்தகம் கூட ஒரு கேள்வி பதில் வடிவத்திலேயே உள்ளது. சுவாமி சிவானந்த பரமஹம்சர் உலகம், ஆன்ம, இறைவன் கூறித்து அவரின் அனுபத்தில் உணர்ந்த உண்மைகளைக் கூறுகிறார். இதில் வேறு எங்கும் அரிய கிடைக்காத உண்மைகளை அறியலாம்.

உண்மையைச் சொல்லப்போனால் கடவுள் உங்களுக்கு எண்ணற்ற வழிகளில் கிடைக்கிறார். கடவுளை தரிசித்தவர்கள் அவர்களின் வழியில் உணர்ந்த உண்மைகளை நமக்கு எடுத்துரைக்கின்றனர். அந்த வகையில் சித்த வேதம் ஒரு அரிய ஆன்மிக நு£லாகும். இதை அவசியம் படிக்க வேண்டியது, ஒவ்வொரு ஆன்மிக சாதகனின் கடமை என்றே சொல்வேன். இதில் எளிய பல விளக்கங்கள் நமது சிந்தனை வட்டத்தில் வராத விஷயங்களுக்கு விடை தருபவையாக உள்ளன.

இவர் வாசியோகம் என்ற பயிற்சியையும் நமக்கு சொல்லிக் கொடுக்கிறார். வாசியோகம் என்பது முச்சுப் பயிற்சியாகும். பிராணயாமம் எனப்படும் முச்சுப் பயிற்சிதான் வாசியோகம் என்று இங்கு தென்பகுதியில் அழைக்கப்படுகிறது.

ஜுவ ஓட்டத்துக்கு மூச்சே பிரதானம் என்பதால், அந்த மூச்சை ஒழுங்கு படித்தினால் காயத்தை கல்பமாக்கி, நீண்ட  ஆயுளை பெற்று தவத்தை தொடர்வதற்காக சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பயிற்சி முறை. வாசியோகம் இங்கு யாருக்கும் எளிய முறையில் சொல்லித்தரப்படுவதில்லை. இதற்கு சித்தவித்தை என்று சொல்கிறார்கள்.  இந்த சித்த வித்தைக்கு உண்மையிலேயே ஆர்வம் உள்ளவர்களுக்குத்தான் இது சொல்லித்தரப்படுகிறது. ஆகையாலே இது உடனடியாக சொல்லித்தரப்படுவதில்லை.

இதைச் சொல்லித் தரும் ஆசானுக்கு கற்கவருபவரின் மேல் நம்பிக்கை வந்து, அதை அவர் ஒழுங்காக செய்யக் கூடியவர்தான் என்பதை உறுதியான பின்பே சொல்லித்தருகிறார். இதை நான் கற்றுக் கொண்டதில்லை. காரணம் இது யாருக்கும் உடன் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை.

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com