[:en]பண நாயகம் வென்று ஜனநாயகம் தோற்றது –  ஆர்.கே.[:]

Advertisements

[:en]

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் பல்வேறு சர்சைகளுக்கிடையே கடந்த 21-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 24ம் தேதி நேற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. களத்தில் 59 வேட்பாளர்கள் நிற்க போட்டியிட்ட வேட்பாளர்களில் முன்மையாக வாக்கு எண்ணிக்கை தொடங்கிய போதே முன்னணி வகித்தார் சுயேட்சை வேட்பாளராக களம் கண்ட  டிடிவி தினகரன். அடுத்ததாக ஆளும் கட்சி வேட்பாளரான மதுசூதனன் பின்னடைவு பெற்று பின்தங்கி வந்தார். மூன்றாவதாக திமுக வேட்பாளர் மருதுகணேஷ் மற்றும் நான்காவதாக நாம் தமிழர் ஜந்தாவது இடமாக நோட்டா ஆறாவது இடத்தில் பாஜக என்று முன்னணி நிலவரம் வெளியிடப்பட்டது.

நடந்து முடிந்த அனைத்து சுற்றுகளிலும் முன்னணி வகித்து இறுதியாக 19 சுற்றுகளும் எண்ணி முடிக்கப்பட்டு, பதிவான மொத்த வாக்குகளான 1,77,890 வாக்குகளில் 89013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற வேட்பாளராக தேர்தல் கமிஷனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அடுத்ததாக வந்த மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும், மூன்றாவதாக வந்த மருதுகணேஷ் 24,651 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்திலும், நான்கவதாக வந்த நாம்தமிழர் வேட்பாளர் கலைக்கோட்டுதயம் 3,860 வாக்குகளும், நோட்டாவுக்கு 2,373 வாக்குகளும், பாஜகவுக்கு 1,417 வாக்குகளும் கிடைத்துள்ளது.

இத்தேர்தல் குறித்து கருத்துக் கூறியுள்ள அரசியல் தலைவர்கள், அரசியல் நோக்கர்கள்  இது  பணநாயகத்துக்கு கிடைத்த வெற்றி. ஜனநாயகம் தோல்வியுற்றுள்ளது. தேர்தல் கமிஷன் தன் கடமையை ஒழுங்காக நிறைவேற்றவில்லை. இது ஜனநாயகத்துக்கு கிடைத்த ஒரு மாபெரும் தோல்வி என்று கூறியுள்ளனர்.

பண பட்டுவாட குறித்து பல புகார்கள் தேர்தல் ஆணையத்துக்கு கொடுக்கப்பட்டும், அது குறித்து தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்க தவறியதாகவே கூறப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரம் தொடங்கியது முதலே சர்ச்சைக்குள் சிக்கியது ஆர்.கே. நகர் இடைத்தேர்தல். வேட்பாளர் தகுதி தேர்வுகளில் நடந்த அரசியல் குளறுபடிகள் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தை கேள்விக்குறியாக்கியது.

அடுத்ததாக ஆளும் கட்சி மற்றும் தினகரன் தரப்பு பணப்பட்டுவாட குறித்த புகார்களை சரிவர நடவடிக்கை இல்லை என்பதாகவும் அறிய முடிகிறது. திமுக தரப்பு இத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யவில்லை என்றும் கண்டிப்பாக பணம் கொடுக்க கூடாது என்று ஸ்டாலின் கூறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மொத்தத்தில் ஆளும் தரப்பு மற்றும் தினகரன் தரப்பு கொடுத்த பணமழையில் ஆர்கே நகர் மக்கள் நனைந்தார்கள் என்றே கூறப்படுகிறது. வீட்டிற்கு ஓட்டுக்கு 10,000 ஆயிரம் வரை கொடுக்கப்பட்டாதாக தகவல் சொல்கிறது. ஆக கூடி பணத்தால் ஓட்டுகளை விலை பேசலாம் என்பது மீண்டும்  உறுதியாகி உள்ளது.

இது ஜனநாயகம் பேசித் திரியும் அரசியல்வாதிகள் யோசிக்க வேண்டிய விஷயம். ஜனநாயகம் என்ற சொல்லை சொல்ல கூட தகுதியில்லாதவர்களாக அரசியல்வாதிகள் ஆகும் காலம் வந்துவிடுமோ என்ற எண்ணத் தோன்றுகிறது. அப்படியொரு நிலைவருமேயானால் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று சொல்லத் தகுதியில்லாது போகும். பணம் ஒன்றே எல்லாற்றையும் தீர்மானிக்கும்  என்பதாகிவிடும். ஆக தேர்தல் ஆணையம் இதில் சீர்திருத்த நடவடிக்கைளை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஆளும் பாஜக தேவையான சட்டங்களை இயற்றி, தேர்தல்

கமிஷனுக்கு போதுமான அதிகாரங்களை கொடுக்க வேண்டும்.  பல்பிடுங்கப்பட்ட  பாம்பாக வெத்துக்கு படம்மெடுப்பது கண்டு யார் பயப்படப் போகிறார்கள் என்பதாக இப்போது உள்ளது. உண்மையான அதிகாரங்களை கொடுத்து ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும். இல்லையேல் வரும் காலங்கள் தேர்தல் என்றால் பணம் கொடுப்பார்கள் என்பது போலாகிவிடும். குறிப்பாக இந்தியா முழுமைக்கும் இது நிலை என்றாலும். தமிழகம் இதில் முன்மையாக உள்ளது. உண்மையில் திராவிட கட்சிகள் ஜனநாயகத்தை பணநாயகமாக்கி பெருமையுடையாதாக ஆக்கியுள்ளன.

ஆளும் பாஜகவின் மக்கள் விரோத பொருளாதாரக்  கொள்கை மற்றும் ஏழை, எளிய மக்களின் அன்றாட தேவைக்களுக்கும் சிரமப்படும் சூழலை ஏற்படுத்திய அரசியல் நடவடிக்கைகள் அவர்கள் மீது மற்றும் ஆளும் தரப்பு மீதும் கொண்டுள்ள அதிருப்தி தினகரனுக்கு வாக்காக மாறியுள்ளது என்ற கருத்தும் உள்ளது. திமுக இத்தேர்தலில் டெப்பாசிட் இழந்துள்ளது.

கடந்த தேர்தலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  வாக்குகளை வாங்கிய திமுக இத்தேர்தலில் 25 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளே பெற்று டெப்பாசிட் இழந்துள்ளது. இது கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினின் தலைமையை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.  திமுகாவின் ஆதரவு ஓட்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓட்டு சரிவு ஏற்பட்டுள்ளது.  தினகரன் என்ற சுயேட்சை  வேட்பாளார் களத்தில் நின்ற மொத்த வேட்பளார்களான 59 பேரில் 57  வேட்பாளர்களை  டெப்பாசிட்  இழக்கச்  செய்துள்ளார். ஆளும் அதிமுக வேட்பாளர் மதுசூதனுக்கு மட்டுமே டெப்பாசிட் கிடைத்துள்ளது. பணம் பத்தும் செய்யும் என்பது ஆர்.கே. நகர் தேர்தலில் வெட்ட வெளிச்சாமாகியுள்ளது. இது ஆரோக்கியமான அரசியலுக்கும் அழகு அல்ல. இதை சரி செய்ய வேண்டிய அரசியல் கட்சிகள் இதை கண்டு காணாமல் இருந்தால்  அவர்கள் அரசியல் செய்ய முடியாது என்பதுதான் நிதர்சனம்.

[:]

You may also like...

Leave a Reply