[:en]எனது ஆன்மிகம் – 22 ஆர்.கே.[:]

Advertisements

[:en]

       

   மகரிஷி மகேஷ் யோகி

அடுத்ததாக நான் உங்களுக்குச் சொல்லப்போவது  மகரிஷி  மகேஷ் யோகியையின் ஆழ்நிலை தியான பயிற்சி பற்றி. வட இந்தியரான இவர், ஆழ்நிலை தியானம் என்ற பயிற்சியை உலமெங்கும் பரப்பி, இந்தியாவின் ஆன்மிகத்தின் உயர்வினை உலகிற்கு பறைசாற்றியவர்.  உலகெங்கும் 40,000 ஆழ்நிலை தியானப்பயிற்சியாளர்களை உருவாக்கி இத்தியானப் பயிற்சியை சொல்லித் தருகிறார்.

மதுரையில் நான் அடிக்கடி காந்தி மியூசியத்தில் உள்ள  நு£லகத்திற்குச் சென்று புத்தகங்கள் வாசிப்பதுண்டு. அது சமயம் அங்குள்ள மகரிஷி மகேஷ்யோகியின் ஆழ்நிலை தியானப்பயிற்சி மையத்தை நான் கவனித்ததுண்டு. அங்கு பலரும் தியானப்பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளனர்.

நான் மியூசியத்திற்கு அடிக்கடி போகும் பழக்கம் உள்ளவன் என்பதால், அந்த தியான  பயற்சியின் பயிற்றுனர் எனக்கு நண்பரானர். அவருடன் ஆன்மிகம் குறித்து அதிக நேரங்கள் பேசுவதுண்டு. அது சமயம் அவர் என்னை ஆழ்நிலை தியானப்பயிற்சியை எடுத்துக் கொள்ளுங்கள், மிகச் சிறப்பாக அது வேலை செய்யும் என்று சொல்வார்.

நான் அதுசமயம் வேறொரு பயிற்சியில் இருந்து வந்ததால், அவரிடம் சிறிது காலம் கழித்து எடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னேன் தவிர, இறுதி வரை அதை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு அமையாமல் போய்விட்டது. ஆனால் அவருடன் உரையாடி உரையாடல் மூலம் நான் தெரிந்துகொண்ட  சில விவரங்களை உங்களுக்கு தெரிவிக்கிறேன்.

ஆழ்நிலை தியான பயிற்சி என்பது மந்திரத்தை ஆதாரமாக் கொண்டது. இப்பயிற்சியின் இறுதியில் ஒரு மந்திரம் உபதேசிக்கப்படும். அம்மந்திரத்தை நீங்கள் சொல்லி, கண்களை மூடி அந்த மந்திர ஓசையில் உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி அமைதியாக இருக்க வேண்டும். மீண்டும் மனதில் எண்ண  அலைகள் எழும்பினால், மந்திரத்தை உச்சரித்து அதில் லயம் ஆக வேண்டும். இப்படியாக மந்திரத்தில் ஒரு முகமாக நாம் ஆழ்ந்த நிலை தியானத்திற்கு செல்லும் வழிமுறைதான் ஆழ்நிலை தியானப்பயிற்சி.

போதுவாக நாம் ஓம்  என்னும் பிரணவ மந்திரத்தை உச்சரித்து தியானம் செய்வதுண்டு. ஆனால் இவர்கள் தனிப்பட்ட ஒவ்வொருவரின் பழக்கவழக்கம், வாழ்வியல் சூழ்நிலை,  மனநிலை இவைகளை ஆய்வு செய்து ஒவ்வொருவருத்தருக்கும் ஒவ்வொரு மந்திரங்களை தருகிறார்கள்.

இதற்காக 6 நாட்கள் அல்லது மூன்று நாட்கள் என்று இரு  விதமாக இந்த பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றனர். இதற்கு கட்டணம் உண்டு. பயிற்சிக்கு முன்பாக இந்த பயிற்சி குறித்த விளக்கங்களை தினமும் 1 மணி நேரம் பேசுகின்றனர். பிறகு இறுதியாக பூ, பழம், ஓரு கர்சீப் கொண்டு வரச் சொல்லுவார்கள். அதில் அவர்களின் குரு தட்சணை என்பதாக கட்டணத்தையும் சமர்பித்து, குருதேவர் மகரிஷி மகேஷ் யோகி முன்பாக பிரத்யோக மந்திரம் உபதேசிக்கப்படும்.

மந்திரத்தின் உதவியுடன் பயிற்சியை செய்த பிறகு  தொடர்ந்து 3 நாட்கள் அது குறித்த சந்தேகங்கள், பயிற்சியில் ஏற்படும் தடைகள் இவற்றை ஆய்வு செய்து, வழி சொல்வார்கள். ஆக இது ஒரு குரு,  சிஷ்யர் பாரம்பரிய பயிற்சி போன்றதாகும்.

மகரிஷி மகேஷ் யோகி நமது புரதான வேத சாஸ்திரங்களின் அடிப்படையில் விஞ்ஞான வழிமுறையில் இப்பயிற்சியை அளிப்பதாக கூறுகிறார். இதில் கூடுதல் பயிற்சி வகுப்புகளும் உண்டு. அதற்கு சித்தி என்று பெயர். தொடர்ந்து ஆரம்ப நிலை பயிற்சியை எடுத்துக் கொண்டவர்கள், அடுத்தக்கட்ட பயிற்சியை எடுத்துக் கொள்ளலாம்.

இப்பயிற்சியின் உன்னத நோக்கம், உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் அதன் அடிப்படையில் ஞானநிலையை அடைவது  என்பதாகும். இப்பயிற்சி அமெரிக்காவில் மிகுந்த பிரபலத்தை அடைந்தது. ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இவரின் சீடராக உள்ளார்கள். இப்பயிற்சியின் பயிற்றுனராக உள்ளனர். இப்பயிற்சி உலகமெங்கும் சொல்லித்தரப்படுகிறது.

இப்பயிற்சியில் கூட்டு தியானம் உண்டு. உலக அமைதிக்காக வன்முறையற்ற உலகத்தை அமைப்பதற்காக எண்ண அலைகளை பரவ செய்யும் தியானத்தையும் இவர்கள் குழு தியானமாக செய்வார்கள். எண்ணங்களின் சக்தியை உணர்ந்து, அதை ஆக்கபூர்வமான பணிகளுக்கு செயல்படுத்தும் உணர்வை உண்டு பண்ணுவார்கள்.

இது குடும்ப வாழ்நிலை சூழல் உள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்ட பயிற்சி, ஆகையால் குடும்பத்தில் உள்ள அனைவரும் இதை பயிற்சி செய்து உடல் ஆரோக்கியம்,  உள ஆரோக்கியத்தை உறுதி  செய்து கொள்ளலாம்.

கடவுளை அடைய உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடலால் அழிவர், உயிரால் அழிவர் திறம்பட மெய்ஞானம் அடைய மாட்டார் என்பது திருமூலர் வாக்கு. அவ்வாக்கின்படி உடலும், உள்ளமும் எத்தனை முக்கியமானது இறைவனை அடைய என்பதை அறிந்து கொள்ளலாம். ஆழ்நிலை தியானம் உங்களை அதற்கு தயார் செய்யும் கருவியாக உள்ளது என்பதில் ஐயமில்லை.

தொடரும்       முந்தயபகுதி

[:]

You may also like...

Leave a Reply