[:en]எனது ஆன்மிகம் – 23 ஆர்.கே.[:]

[:en]

வேதகாலத்தில் மந்திர உச்சாடனங்களுக்கு மிகுந்த மரியாதை இருந்தது. மந்திர உச்சாடனம் என்பது ஒரு அலைவரிசையில் ஒரு குறிப்பிட்ட ஒலியை ஏற்படுத்துவது. அவ்வொலி சிறப்பான சில விஷயங்களை செய்யும் சக்தி உள்ளது என்பதை நமது முன்னோர்கள் கண்டறிந்து உள்ளனர்.

இந்த உலகம் இரு பெரும் சக்தியால் ஆளப்படுகிறது. ஒன்று ஒளி என்ற வெளிச்சம். மற்றோன்று ஒலி என்ற சப்தம். வெளிச்சமும், சப்தத்திற்குள்ளும்  தான்  இந்த முழு பிரபஞ்சமும் அடங்கியுள்ளது. பிரபஞ்சத்தின் எல்லா பொருட்களிலும் இந்த இரு நிலை அடங்கியுள்ளது. மிகச்சிறிய  அணுவின் மூலம் உருவாக்கப்படும் அணுகுண்டை எடுத்துக் கொள்ளுங்கள். அது வெடிக்கும்போது எழும் சப்தமும், ஒளியும் மிகப்பெரிதாக உணரப்படுகிறது.

இறைவனை நாத வடிவினன் என்றும், ஒளி வடிவன், ஜோதி சொரூபமானவன் என்று நம் வேதங்கள் சொல்கின்றன. வள்ளலார் அருட்பெரும்ஜோதி தனிப் பெரும் கருணை என்று இறைவனை விளிக்கிறார். ஆக இறைவன் நாதவிடிவினானகவம், ஜோதி வடிவனமாகவும்  இருப்பதாக நம் முன்னோர்கள் உணர்ந்துள்ளனர்.

ஆகையால்தான் நாம் ஒலிக்கும், ஒளிக்கும் நமது ஒவ்வொரு நிகழ்வுகளிலும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். ஆன்மிக செயல்பாடுகளில் நீங்கள்  மிக நன்றாக உற்று நோக்கினால் இதன் முக்கியத்துவத்தை உணர்வீர்கள். ஒலி மற்றும் ஒளி இல்லாது எந்த சடங்கு, ஆச்சாரங்களும் இல்லை. ஆக ஒலி மற்றும் ஒளிக்கு கொடுக்கும் முக்கியத்தைத்தையும், அதன் உள்ளார்ந்த அர்த்ததையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

மகரிஷி மகேஷ் யோகி தனது ஆழ்நிலை தியானத்தில் இதன் பின்னணியில் இருந்து இதனை அனுகிறார். ஒலி மற்றும் ஒளி. அதில் முக்கியமாக ஒலிக்கு கவனம் கொடுக்கப்பட்டு மந்திர உச்சாடனத்தில் லயம் ஆகி ஒருமுகப்படுதலை கற்பிக்கிறார். ஆக நண்பர்களே நீங்கள் உலகின் எந்த  மூலைக்குப்போனாலும் கடவுளை உங்களை அழைத்துக் கொண்டே இருக்கிறார். ஏதாவது ஒரு தருணத்தில் நீங்கள் உண்மையை உணர மாட்டீர்களா என்று காத்திருக்கிறார்.

 

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *