[:en]எனது ஆன்மிகம் – 26 ஆர்.கே.[:]

Advertisements

[:en]

நானும் அவ்விதமே செய்தேன். எனக்கு எந்த அனுபவமும் தோன்றவில்லை. மனம் அலை பாய்ந்த விதமாக இருந்தது. சரியென்று வந்துவிட்டேன். நண்பர் என்னிடம் கேட்டார்  எப்படி இருந்தது என்று. நான் சொன்னேன். ஒன்றும் மாற்றம் தெரியவில்லை என்றேன். சில நாட்கள் பயிற்சி செய் கட்டாயமாக அனுபவம் ஆகும் என்றார். நானும் வீட்டில் சில  நாட்கள் பயிற்சி செய்தேன். ஆனால் ஒன்றும் அனுபவத்திற்கு வரவில்லை. பிறகு அப்பயிற்சியை விட்டுவிட்டேன்.

ஆனால் சில மாதங்கள் சென்ற பிறகு ஒரு நாள் அந்நண்பர் ஒரு கூட்டு தியானம் நடக்கிறது. நீ அங்கு வா கண்டிப்பாக அனுபவம் ஆகும் என்று அழைத்துச் சென்றார். மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்திருந்த ஒரு ஆஷ்ரமத்தில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் அமர்ந்திருந்தனர்.

நான் சென்றவுடன் எனது நண்பர் இவர் சில நாட்கள் பயிற்சி செய்துள்ளார். இப்போது மீண்டும் கூட்டி வந்துள்ளேன் என்றார். அப்போது ஒருவர் என்னை தனியாக உட்கார வைத்து எனக்கு ஏற்கனவே அறிமுகமான அதே குரு வேண்டுதல் வாசகத்தை நினைவுபடுத்தி, அமைதியாக அமர வைத்தார்.

மிக ஆச்சரியமான சம்பவம் நடந்தது. என்னவென்றால் எனது மனதில் ஒரு அமைதியான எண்ணங்கள் தோன்றின. மனம் மிகுந்த அமைதி, ஆனந்தத்தில் மிதந்ததது. வேறு எந்த எண்ணங்களும் தோன்றவில்லை. அமர்ந்திருந்தது 20 நிமிடங்கள் இருக்கும். அத்தனை நேரமும் அந்த அனுபவம் இருந்தது.  தியான பயிற்சி முடிந்தவுடன் என்னிடம் எனது அனுபவத்தை கேட்டார்கள். நான் மிகவும் நன்றாக அனுபவமானதாக கூறினேன். அவர்கள் இதைத் ª£டர்ந்து வீட்டில் பயிற்சி செய்யுங்கள் நல்ல முன்னேற்றம் வரும் என்றார்கள்.

அதன் பிறகு நான் அதை வீட்டில் பயிற்சி செய்தேன் என்று சொல்ல முடியவில்லை. அதில் ஏனோ எனக்கு முழுவதுமாக ஒரு பிடித்தம் ஏற்படவில்லை. காரணம் நீங்கள் எந்த முயற்சியும் செய்யாமலே எப்படி அனுபவம் ஏற்படுகிறது. நமது முயற்சியே தேவையில்லையா என்று பல குழப்பங்கள். அந்த வயதில் அதன் காரணங்களை நான் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் ஏற்கனவே செய்து வந்த பயிற்சியும், இப்பயிற்சியும்  நேர் எதிரான பயிற்சி முறையாக இருந்தது. எனவே  இதை தொடர்வதில் இருந்த தயக்கத்தில் அதை விட்டுவிட்டேன்.

ஆனால் நான் அனுபவத்த அந்த 20 நிமிட அனுபவங்கள் இன்றும் என் நினைவில் உள்ளது. ஆனால் அன்றைய தினம் மட்டுமே அது நிகழ்ந்தது. அதற்கு முன்பாக இதை பயிற்சியை செய்யும் போது அது நிகழவில்லை. இது குறித்து நான் யாரிடமும் கேட்கவுமில்லை. வெகுகாலத்திற்கு பிறகு தான் குருவின் வழியாக நடக்கும் தியான அற்புதங்களை நான் புரிந்து கொள்ள முடிந்தது. குருவிடம் முழுவதுமாக சரண்டர் ஆனால், அவர் நமக்காக சில காரியங்களை ஆன்மிகமாக செய்கிறார் என்பது உண்மை. அல்லது அவரது சக்தியை கிரஹித்துக் கொள்ளும் ஆற்றல் நமக்கு வருகிறது என்பதும் உண்மை.

 

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply